Latest News

November 05, 2015

"அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த இந்திய அரசின் கொள்கை விரைவில் மாறும்"
by admin - 0

இலங்கை அகதிகள் குறித்த இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் செருப்பு தாக்குதலுக்கு உள்ளான எம்.கே. நாராயணன் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான தி இந்து மையம் நடத்திய கருத்தரங்கில் பேசிய நாராயணன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம், சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.

இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துக்களை முன்வைத்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கான முகாமில், சுமார் 66 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அரசிடம் பதிவுபெற்று முகாம்களுக்கு வெளியில் சுமார் 40,000 பேர் வசிக்கின்றனர்.

தற்போது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை தற்போது உருவாகிள்ளது’’ என அதன் நிறுவனர் சந்திரஹாசன் கூறினார்.

ஈழ அகதிகளுக்காக தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டிருக்கும் வசதிகளைச் சுட்டிக்காட்டிய சந்திரஹாசன், தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல வேண்டிய கடமை இருப்பதாகத் தெரிவித்தார்.

அகதிகளில் சுமார் 40,000 பட்டதாரிகள் இருப்பதாகவும், இலங்கையில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், இவர்கள் திரும்பிச்சென்றால் பலருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கலாம் என்றும் கூறினார்.

தாங்கள் விட்டுவந்த நிலத்தைப் பாதுகாப்பதற்காக பலரும் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஆனால், திரும்பிச் செல்லும்போது தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு செய்ய வேண்டுமென்றும் அவர் கூறினார்.

அதற்குப் பிறகு பேசிய இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில்லை என்ற இந்திய அரசின் பார்வையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவிலேயே இது குறித்து தற்போதைய அரசு ஒரு முடிவெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.

ஆகவே, இங்கிருக்கும் அகதிகள் விரும்பினால் அவர்கள் குடியுரிமை பெறக்கூடிய சூழல் உருவாகுமென்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சி முடிவடைந்து எம்.கே. நாராயணன் திரும்பிச் செல்லும்போதுதான், பிரபாகரன் என்ற நபரால் அவர் தாக்கப்பட்டார்



« PREV
NEXT »

No comments