Latest News

November 02, 2015

குளோபல் தமிழ் போராம் மீதான தடை நீக்கப்படும்?
by Unknown - 0

க்ளோபல் தமிழ் போராம் மீதூன தடை நீக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் இமானுவெல் அருட்தந்தை இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னதாக, தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடை செய்யப்பட்டுள்ள க்ளோப் தமிழ் போராத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய இமானுவெல் அருட்தந்தைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்வதாகவும் பொருத்தமான நேரத்தில் இலங்கை விஜயம் செய்ய உள்ளதாகவும் இமானுவெல் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் 17 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், 400 தனிப்பட்ட நபர்களையும் கறுப்பு பட்டியலிட்டு தடை செய்துள்ளது.

இந்த தடை குறித்து பாதுகாப்பு அமைச்சு மீளவும் மீளாய்வு செய்யத் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மீளாய்வு செய்யப்பட உள்ளது.

முள்ளிவாய்க்கால் பதுங்கு குழியொன்றில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணமொன்றின் அடிப்படையில் இவ்வாறு நிறுவனங்களும் தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments