தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும் ஏற்பட்டு மயக்கமான நிலையில் 13 கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 07 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
03 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே திடீர் சுகவீனமுற்றனர். இந்நிலையிலேயே, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
No comments
Post a Comment