சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் கடந்த 22ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்துடனும், தமிழீழ தேசிய மலரான கார்த்திகைப் பூவின் படத்துடனும் இணைந்ததாக, முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி 22ம் திகதி அறிமுகமானது.
கடந்த வாரம் பிரான்ஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி வெலுத்தும் முகமாக,முகநூல் நிறுவனம்,பிரான்ஸ் தேசியக்கொடியுடனான முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கியிருந்தது.
இவ்வாறனதொரு நிலையிலேயே,தமிழர்களை நினைவுகூருவோம் என்ற வாசகத்துடன் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பலரும் குறித்த செயலியைப் பயன்படுத்தி, தமது முகநூலின் கோப்புப் படத்தை மாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://app.profileoverlays.com/tamils?q=tamils&by=1404738
No comments
Post a Comment