பிரான்ஸ் பத்தில் துப்பாக்கிச்சூடு - வீதியெங்கும் பலரது உடலங்கள்!!
பரிஸ் பத்தில் பெரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. AK 47 துப்பாக்கியினால் சரமாரியான துப்பாக்கிச்சூடுகள்நடாத்தப்பட்டுள்ளன. வீதியயெங்கும் உடலங்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று நிமிடங்களின் முன்னர், பரிஸ் பத்தில், மெட்ரோ Goncourt அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. Boulevard Jules Ferry - La rue de la Fontaine au Roi இற்கிடையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
இதில் பலர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஆயுததாரி இன்னமும் மடக்கப்படவில்லை.
மேலதிக விபரங்கள் தொடர்ந்து வழங்கப்படும்..
No comments
Post a Comment