Latest News

November 10, 2015

எதிர்வரும் 13 ஆம் திகதி தெற்கு கடற்பரப்பில் மீன் பிடிக்க, விமானங்கள் பறக்கத் தடை
by Unknown - 0

எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கும் விமானங்கள் பறப்பதற்கும்

தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்வெளியிலிருந்து WTF 1190 F என்ற சிதைவுப் பாகமொன்று தெற்கு கடற்பகுதியில் வீழும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதியே குறித்த பாகம் தெற்கு கடற்பரப்பில் வீழும் அபாயமுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்கு கடற்பரப்பின் 65 கிலோமீற்றரிலிருந்து 100 கிலோமீற்றர் வரையான தூரத்திற்குள் குறித்த விண்பொருள் வீழும் அபாயமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த விண்பொருளால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலும் 13 ஆம் திகதி முற்பகல் 11.30 அளவிலேயே குறித்த விண்பொருள் பூமியில் வீழவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பொருள் வீழும் சாத்தியமுள்ள பகுதியை மையப்படுத்தியே விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலைய போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமையதிகாரி கிரிஷாந்தி திசேரா கூறியுள்ளார்.



« PREV
NEXT »

No comments