சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
அதில், அபு ஷுராயா, சிறிய வயதிலிருந்தே, சமயக் கற்கைகளில் ஆர்வம் காட்டியதாகவும், இலங்கையில் தனது கல்வியைப் பூர்த்தி செய்த பின், வெளிநாட்டில் ஷரியா பற்றிக் கற்றதாகவும், இலங்கையின் உள்ளூர் மொழிகள் (தமிழ், சிங்களம்) தவிர, ஆங்கிலம், உருது, அரபு ஆகிய மொழிகளில் அவருக்குப் பரிச்சயம் இருந்ததாகவும், அந்தச் சஞ்சிகை தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்ததாகவும், அவரோடு இணைந்து, 16 பேரும் இணைந்ததாகவும் தெரிவிக்கும் அச்சஞ்சிகை, அதில் அவரது பெற்றோர், மனைவி, 6 குழந்தைகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.
தனது கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதியன்று, சிரியாவின் அல்- றக்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில், காயப்பட்டோர், உயிரிழந்தோரைப் பற்றிப் பார்ப்பதற்காக அவ்விடத்துக்குச் சென்றதாகவும், அங்கிருந்து திரும்பிவரும் போது, இரண்டாவது விமானத் தாக்குதலில், ஷுராயா கொல்லப்பட்டதாகவும், அச்சஞ்சிகை தெரிவிக்கிறது.
No comments
Post a Comment