சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சட்ட ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றால், ஜனநாயக அடிப்படையில் அதற்கு பொதுமக்கள் வாக்களித்தால் மட்டுமே எந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியும்.
சுவிஸில் இஸ்லாமிய பெண்கள் ’பர்கா’ எனப்படும் முகத்திரை அணிவதால், பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்துள்ளது.
இந்த புகார்களை தொடர்ந்து, சுவிஸின் டிசினோ(Ticino) என்ற மாகாணம் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொது மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில், சுமார் 75 சதவிகிதத்தினர் பொதுஇடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணியக்கூடாது என்று வலியுறுத்தி வாக்களித்துள்ளனர்.
முகத்திரை அணியக்கூடாது என பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பான புதிய சட்டம் டிசினோ மாகாணத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த சட்டத்தை மீறி பொது இடங்களில் முகத்திரை அணிந்தால், 100 பிராங்க் முதல் 10,000 பிராங்க் வரை அபராதமாக செலுத்த வேண்டும்
டிசினோவில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் மட்டுமின்றி, இந்த மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பாக, டிசினோ எல்லைகளில் ‘இந்த மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் அது டிசினோ மாகாணத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment