பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற அவர் பழைய கடவுச்சீட்டை எடுத்து சென்றுள்ளார்.
அந்தக் கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறப்பாடு செய்யப்பட்டுள்ளதனால், விமான நிலைய அதிகாரிகளால் அவருக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடவுச்சீட்டை எடுத்துவருமாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு சென்று புதிய கடவுச்சீட்டை எடுத்து வந்த அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இத்தாலிக்கு புறப்பட்டு செல்வதற்காக விமல் வீரவன்ச இன்று காலை விமான நிலையத்திற்கு சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments
Post a Comment