Latest News

October 24, 2015

பிரித்தானியா மகாராணியின் முன்பு மண்டியிட்டு கையில் முத்தமிட முடியாது?! – பிரித்தானிய எதிர்கட்சி தலைவருக்கு வந்த ஆப்பு!
by admin - 0

பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தை சந்திப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான ஜெருமி கொர்பின் மறுத்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய அதிகாரத்தை அமைச்சர்கள் அலுவலகம் அதிரடியாக பறித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், நீதிபதிகள், மதகுருக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்நாட்டின் அந்தரங்க சபையில்(Privy Council) உறுப்பினராக இணைய வேண்டும் என்பது மரபு.

பிரித்தானிய மகாராணியின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான் இந்த அந்தரங்க சபையில் உறுப்பினராக இருப்பவர்களின் முக்கிய பணியாகும்.

இந்த சபையில் உறுப்பினராக சேரும் தலைவருக்கு மகாராணி மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சி (தொழிலாளர் கட்சி) தலைவரான ஜெருமி கொர்பினிற்கு அந்தரங்க சபையில் இணைய கோரி தகவல் அனுப்பப்பட்டது.

ஆனால், அதே நாளில் தான் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், மகாராணியை சந்திக்க முடியவில்லை என தகவல் அனுப்பியுள்ளார்.

பிரித்தானிய மகாராணியை சந்திக்க ஜெருமி கொர்பின் மறுத்துள்ளதற்கு வேறொரு காரணம் கூறப்படுகிறது.

அந்தரங்க சபையில் உறுப்பினராக சேரும் தலைவர், மகாராணியின் முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தம் கொடுத்த பின்னரே பதவி பிரமானம் முடிவு பெறும்.

இவ்வாறான சூழலில், மகாராணியின் முன் மண்டியிடுவதை தவிர்க்கவே அவரை சந்திக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நேற்று அமைச்சர்கள் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், ஜெருமி கொர்பின் அந்தரங்க சபையில் உறுப்பினராக சேரும் வரை, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ’right honourable’ என்ற மரியாதைக்குரிய பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், இனிமேல் ஜெருமி கொர்பினை குறிப்பிடும்போது ’Rt.Hon.Jeremy Corbyn’ என குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தரங்க சபையில் உறுப்பினராக உள்ள ஒருவர் கூறுகையில், மகாராணியை சந்திக்க மறுத்து வேறொரு நிகழ்ச்சி இருப்பதாக கூறிய ஜெருமி கொர்பின் தனது நண்பர்களுடன் ஸ்கொட்லாந்தில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது தற்போது வெளியான ஒரு புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

ஜெருமி கொர்பினின் மரியாதைக்குரிய பட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதால், பிரித்தானிய நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்த தகவல்களும் அவருக்கு தெரிவிக்கப்படாது.

அடுத்த ஒரு மாதத்திற்கு ஜெருமி கொர்பின் அந்தரங்க சபையில் உறுப்பினராக சேர முடியாது என்றும், 30 நாட்களுக்கு பிறகு நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்றால் மட்டுமே உறுப்பினராக சேர முடியும் என கூறியுள்ளார்
« PREV
NEXT »

No comments