சித்த ஆயுர்வேத வைத்தியத்துறையை முன்னேற்றுவதற்கு இலங்கை _ இந்திய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள வடக்கு மாகாண சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
வடஇலங்கை சுதேச வைத்திய சபையின் ஏற்பாட்டில் சுன்னாகத்தில் இயங்கிவரும் லங்கா சித்த ஆயுர்வேத வைத்திய கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சித்த ஆயுர்வேத மருத்துவம் பாரம்பரியம்மிக்க வைத்தியம், அரசர் காலத்தில் பரம்பரை பரம்பரையாக வந்ததாகும். இது தமிழர்களுடையதாக உள்ளது. இந்தியாவில் தலைசிறந்த வைத்தியமாக இன்றும் உள்ளது.
இன்றைய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூகத்தின் போக்கும் அத்தகைய நிலையில் உள்ளதால் சித்த ஆயுர்வேத வைத்தியமும் அதன் ஆர்வமும் குறைந்து செல்கிறது. சித்த ஆயுர் வேத வைத்தியம் நீண்ட ஆயுளும் மகத்துவமும் மிக்க ஒன்றாகவே உள்ளது. இத்தகைய வைத்தியத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்க்கவேண்டும்.
தற்போது லிங்கா சித்த ஆயுர்வேத வைத்திய கல்லூரிக்குப் பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. இங்குள்ள விரிவுரையாளர்கள், மாணவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் மற்றும் கல்லூரிக்கான சொந்தக் கட்டட வசதிகள், ஆளணிகள் தேவை தொடர்பில் இந்திய அரசுடனும் மற்றும் இலங்கை மத்திய அரசுடனும் பேச்சு-வார்த்தையில் ஈடுபடமுடியும். இத-ற்கான நடவடிக்கையை வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரூடாக செய்வ-தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments
Post a Comment