தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உட்பட சட்ட மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர். இதனையடுத்து அவர்களின் விடுதலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 19ஆம் திகதி விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வழங்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.
No comments
Post a Comment