Latest News

October 06, 2015

முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு விநாயகர் கோவிலில் குழந்தை பிறந்தது கணேஷ் எனபெயரிட்டனர்
by admin - 0


மும்பையைச் சேர்ந்தவர் இலியாஸ்  ஷேக் இவரது மனைவி நூர்ஜகான் (வயது 24 ) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  நூர்ஜகான்க்கு பிரசவ வலி எடுத்ததால்  தனது கணவருடன்
வாடகை டாக்ஸியில் ஒன்றில் ஏறினார்.


  பிரவச வலி அதிகமாக டாக்ஸி டிரைவர் அவர்களை வடாலா பகுதியில் வழியிலேயே இறக்கிவிட்டுவிட, செய்வதறியாது தவித்த அப்பெண், வலி அதிகரித்ததால் கதறி அழுதார். அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு வழிபட வந்த பெண்கள், உடனடியாக அப்பெண்ணை தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்று, அப்பகுதியை துணி மற்றும் புடவைகளால் சுற்றி மறைத்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இது குறித்து நூர்ஜஹான் கூறுகையில்,

 நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், கேட்காமலேயே எல்லோரும் ஓடி வந்து உதவினர். அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் உடனடியாக வந்து மருத்துவத்துக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்து உதவினர். நான் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அவர்களே தொப்புள் கொடியையையும் பிரித்து, என் குழந்தையை எனக்குக் காட்டினர். என் கணவரையும் அழைத்து வாழ்த்துக் கூறி, மகனை அவர் கையில் கொடுத்தனர்.

அந்த விநாயகர்தான் என்னையும், என் மகனையும் காப்பாற்றினார். என் மகனுக்கு அவரது பெயரையே  கணேஷ் என சூட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments