Latest News

October 13, 2015

ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் -மஹிந்த அணி சூளுரை
by admin - 0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறப்போவதாகவும் மஹிந்த அணியினர் சூளுரைத்துள்ளனர்.
vivasaayi

எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக பாரிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்த்தன பந்துல குணவர்த்தன விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­விக்­கையில், ஆட்சி மாற்றம் நாட்­டுக்கு நன்­மை­ய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. ஆனால் இந்த மாற்றம் சர்­வ­தே­சத்­துக்கு மட்­டுமே சாத­கத்தை வழங்­கி­யுள்­ளது. குறிப்­பாக ஐக்­கிய நாடுகள் சபைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் ஏற்ற வகையில் ஒரு ஆட்சி நாட்டில் நில­வு­கின்­றதே தவிர மக்கள் எதிர்­பார்த்த மாற்றம் இது அல்ல. பாரா­ளு­மன்­றத்­திலும் இந்த விட­யங்கள் தொடர்பில் எம்மால் கேள்­வி­கேட்கும் உரி­மையும் பறிக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் நாட்டு மக்­க­ளுக்கும் இந்த விட­யங்கள் தொடர்பில் அறிந்­து­கொள்­ளக்­கூ­டிய வாய்ப்­பு­களும் இல்­லாது போய்­விட்­டது.

குறிப்­பாக இன்று நாட்டில் பிர­தான இரண்டு சிக்­க­லான விட­யங்கள் உள்­ளன. ஒன்று ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் இலங்கை தொடர்­பி­லான அறிக்கையை குறிப்பிடலாம், அடுத்ததாக நாடு எதிர்­நோக்கும் பொரு­ளா­தார சிக்­கல்கள் காணப்படுகின்றன. இந்த இரண்­டையும் தவிர ஏனைய அனைத்­தையும் அர­சாங்கம் பேசு­கின்­றது. ஆனால் இந்த விட­யங்கள் தொடர்பில் கேள்­வி­கேட்டால் அர­சாங்கம் எமது வாயையும் மக்­களின் வாய்­க­ளையும் மூடி விடு­கின்­றது.

இன்று எதிர்­கட்­சி­யாக செயற்­ப­டுவோர் இந்த பிரச்­சி­னைகள் தொடர்பில் வாய்­தி­றக்­காது செயற்­ப­டு­கின்­றனர். அர­சாங்­கமும் எதிர்­கட்­சியும் ஒரு அணி­யாக செயற்­படும் வேளையில் நாட்டில் உண்­மைகள் அனைத்தும் புதைக்­கப்­பட்­டு­வி­டு­கின்­றன. ஆகவே எதிர்க்­கட்சி பொறுப்பை நாம் ஏற்­றுக்­கொள்ளும் நேரம் வந்­துள்­ளது. அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட்­சிக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டாலும் அவர்­களால் எந்­த­வித பயனும் இல்லை. ஆனால் நாம் தான் எதிர்­கட்­சியின் பங்­கினை மேற்­கொண்டு வரு­கின்றோம். இதை தொடர்ந்தும் முன்­னெ­டுக்க நாம் தயா­ரா­கவும் உள்ளோம். ஆகவே எதிர்­வரும் 19ஆம் திகதி விகா­ர­ம­கா­தேவி உள்­ளக அரங்கில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி ஒன்­று­சேர்­கின்­றது. அதேபோல் பாரா­ளு­மன்­றத்­திலும் ஒன்­றி­ணைந்த எதிர்­கட்­சி­யாக செயற்­ப­டவும் தீர்­மா­னித்­துள்ளோம்.

விமல் வீர­வன்ச தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் அறிக்­கையை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­ட­போதே இலங்­கையின் மீதான அடுத்­த­கட்ட அடக்­கு­மு­றைகள் ஆரம்­பித்­து­விட்­டன. அதா­வது ஐக்­கிய நாடுகள் சபையும் அமெ­ரிக்­காவும் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்கும் காய்­ந­கர்த்­தல்­களில் இலங்கை சிக்­கிக்­கொண்­டுள்­ளது. ஆகவே இப்­போது எமக்கு எதி­ராக மிகப்­பெ­ரிய ஆபத்­துக்கள் மட்­டுமே வர­வுள்­ளன.

அதேபோல் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் பரிந்­து­ரைகள் அனைத்­தையும் முழு­மை­யாக நடை­மு­றை­ப­டுத்­து­வ­தாக அர­சாங்கம் வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளது. அதேபோல் அமெ­ரி­க்காவின் பிரே­ர­ணை­யையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இவ்­வாறு அவர்­களின் தேவைக்­கேற்ப எமது அர­சாங்­கத்தை இயக்­கு­வதே இப்­போது எமக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளது.
குறிப்­பாக இலங்­கையின் நடை­மு­றையில் இருக்கும் பிர­தான இரண்டு சட்­டங்­களை நீக்க அல்­லது மாற்­றி­ய­மைக்க அர­சாங்கம் தயா­ராக உள்­ளதை ஒப்­புக்­கொண்­டுள்­ளது. அதா­வது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தையும், பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்­தையும் நீக்க அல்­லது மாற்ற இவர்கள் தயா­ராக உள்­ளனர். ஆரம்­பத்தில் வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் 13ஆம் திருத்­தத்தை மீறி செயற்­பட ஆரம்­பித்­த­போதும் மாகா­ண­சபை அதி­கா­ரங்­க­ளுக்கு அப்பால் செயற்­பட ஆரம்­பித்த போதும் அப்­போ­தைய அர­சாங்கம் இந்த பொது­ஜன பாது­காப்பு சட்­டத்தின் மூல­மா­கவே இவர்­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­தியது. அப்­போது இந்த சட்­டமே கைகொ­டுத்­தது. அதே நிலைமை மீண்டும் வரு­கின்­ற­போது அர­சாங்­கத்­தினால் தடுக்க முடி­யாத வகையில் இருக்­கவே இந்த சட்­டத்தை நீக்க இவர்கள் திட்டம் போட்­டுள்­ளனர். அகவே இவற்றை அர­சாங்கம் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

போர்க்­குற்­றங்கள் தொடர்பில் எமது இரா­ணு­வத்தை பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­களை ஒரு­புறம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் மறு­புறம் இலங்­கையின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் வகையில் சட்­டங்­களை மாற்­றி­ய­மைக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­கின்­றனர். இவற்றை பாரா­ளு­மன்­றத்தில் தட்­டிக்­கேட்கும் அதி­காரம் எமக்கு இல்­லாமல் போயுள்­ளது. ஆகவே முதலில் எம்மை பலப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அதற்­காக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக முதலில் எம்மை மாற்­றிக்­கொள்­ளவே இந்த முயற்­சி­களை மேற்­கொள்­வ­தாக அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­விக்­கையில்,
கலப்பு நீதி­மன்றம் என்­பது உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. ஆனால் இதில் உள்­ளக விசா­ர­ணை­யாக நடை­பெ­று­வ­தற்­கான எந்­த­வொரு அறி­கு­றி­களும் இல்லை. அதா­வது இலங்­கையின் உள்­ளக சட்­ட­தி­ட்டங்­க­ளுக்கு அமைய எமது தரப்பே ஒரு விசா­ர­ணையை மேற்­கொள்­ளு­மாயின் அதை உள்­ளக விசா­ர­ணைகள் என குறிப்­பிட முடியும். அதேபோல் சர்­வ­தேச தலை­யீட்டில் முழு­மை­யான சர்­வ­தேச பொறி­மு­றை­க­ளுக்கு அமைய செயற்­ப­டும்­போது அதனை முழு­மை­யான சர்­வ­தேச விசா­ரணை என குறிப்­பிட முடியும்.

ஆனால் இதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது கலப்பு முறை­மை­யாகும். இதில் குறிப்­பி­டப்­ப­டுள்ள விட­யங்­களில் பெரும்­பா­லான விட­யங்கள் சர்­வ­தே­சத்தின் தலை­யீட்டில் நடை­பெறும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் இது ஒரு சர்­வ­தேச விசா­ர­ணையின் பக்கம் சுட்­டிக்­காட்டும் விசா­ர­ணை­யா­கவே கரு­தப்­பட வேண்டும்.
மக்­களை ஏமாற்ற இவர்­கள் முன்­வைக்கும் கருத்­து­களை நாம் முழு­மை­யாக எதிர்­கின்றோம். அதேபோல் ஒன்­றி­ணைந்த எதிர்­கட்­சி­யாக எமது கட­மை­யையும் நாம் சரி­யாக செய்து முடிப்போம்.

கேள்வி :- பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எதிர்க்­கட்சி செயற்­படும் போது உங்­களால் எவ்­வாறு எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட முடியும்?

பதில்: பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் அனைத்தும் அர­சாங்­கத்­துக்கு சார்­பா­கவே உள்­ளன. அதேபோல் ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் பேர­வையின் கைபொம்­மை­யாகவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­ப­டு­கின்­றது. ஆகவே அவர்­களை எதிர்க்­கட்­சி­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

கேள்வி :- அப்­ப­டி­யாயின் எதிர்க்­கட்சி தலைவர் பத­வியை உங்­களில் வச­மாக்கும் நோக்கம் உள்­ளதா?

பதில்: அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எதிர்­கட்­சி­யாக செயற்­பட்டால் மட்­டுமே எம்மை மக்­கள்­ஏற்­றுக்­கொள்­வார்கள் என்பது அர்த்தமற்ற கதையாகும். ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயற்படும் போது அது சபாநாயகரினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எம்மை ஏற்றுக்கொள்வார்கள் என நாம் எதிர்பார்த்தும் அது நடைபெறவில்லை. ஆனால் இனிவரும் காலங்களிலும் நாம் எதிர்கட்சியாகவே செயற்படவுள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி பதவியும் எமக்கும் கிடைக்கும்.

கேள்வி-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாகிய செயற்படுவதாக கூறுகின்றீர்கள் அப்படியாயின் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அழைப்பு உள்ளதா?
பதில்: ஆம், எதிர்க்கட்சியாகிய செயற்பட விரும்பும் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுக்கு தனிப்பட்ட ரீதியில் இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் அவரும் கலந்துகொள்வார் என்று நம்புகின்றோம். அவர் இப்போதும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராகவே செயற்படுகின்றார் என்றார்
« PREV
NEXT »

No comments