பீகார் கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருப்பவர் அவதேஷ் பிரசாத் குஸ்வாகா. இவர், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் பேரம் பேசுவது போன்றும், பின்பு ரூ.4 லட்சத்தை லஞ்சமாக பெறுவது போன்றும் அமைந்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.
அவதேஷ் லஞ்சம் கேட்டு பேரம் பேசுவது போன்ற 2 வீடியோக்கள் வெளியாகி உள்ளதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் நீக்கி உள்ளார். இதனால் அவதேசும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்துள்ளார்.
வீடியோ குறித்து அவதேஷ் கூறுகையில், இது எப்படி வந்தது என்றே எனக்கு தெரியவில்லை. என்னை குறி வைத்து பாஜ, செய்த சதி இது என்றார்.
பீகார் சட்டசபை தேர்தலின் ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் ஒருவர் லஞ்ச புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, நிதிஷ்குமார் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாஜக இதனை பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது. அவதேஷ், பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பிப்ரா தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment