Latest News

October 23, 2015

சுவிஸ் நாட்டவரும் சைவ முறைப்படி ஏடு தொடக்கி வியப்பில் ஆழ்த்தினர்
by admin - 0

பண்டாசுரனுடன் ஞானாம்பிகை போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் ஞானலிங்கப்பெருமானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். அன்னை வன்னி மரத்தை அழித்து அசுரனை ஒழித்தாள். ஞானாம்பிகை உனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற ஒன்பது இரவுத் திருவிழா இன்று (22.10.15) நல்வெற்றித் திருநாள் (விஜயதசமி) கன்னி (வன்னி) வாழை வெட்டுடன் இனிதே நடந்தேறியது .



நற்செயல்கள் யாவும் தொடங்க இன்று முப்பெருந்தேவியரும் நிறைந் அருளும் நாளகும். இந்நிறை நாளில் பலநூறு மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு ஞானலிங்கேச்சுரத்தில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் முன்னிலையில் ஏடுதொடக்கல் முதல் இயலிசைக் கல்வி வரை தொடக்கி வைத்தனர். இதில் குறிப்பிட்டுச் சொல்வதாய் சுவிஸ் நாட்டவரும் தம் குழந்தைக்கு ஞானலிங்கேச்சுரத்தில் ஏடுதொடக்கியது பலரையும் வியக்கவைத்தது.
« PREV
NEXT »

No comments