சாவகச்சேரி பொலிஸ் நிலையம் இராணுவத்தினரால் முற்றுகை. பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமறைவு.
நாவற்குழி பகுதியில் விளம்பர பதாகைகளின் இரும்பு குழாய்களை அறுத்து திருடி செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்ட ஏழு இராணுவத்தினரையும் விடுவிக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலை பேசி ஊடாக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
அதனால் பொறுப்பதிகாரி தொலை பேசி அழைப்பினை எடுக்கவில்லை எனவும்.அதனால் இராணுவ உயர் அதிகாரிகள் கொண்ட குழு பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக சமூகம் அளித்துள்ளதாகவும்,
அவ்வேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி விட்டதனால் பொலிஸ் பொறுப்பதிகாரியை எதிர்பார்த்து இராணுவ உயர் அதிகாரிகள் பல இராணுவத்தினருடன் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பதனால் அப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment