யாழ்.வல்வெட்டித் துறை ஊரிக் காடு விஜயபாகு காலாட்படை படையணி இராணுவ முகாமின் இராணுவச் சிப்பாயொருவர் வழமை போன்று இரவு சக சிப்பாய்களுடன் உணவு அருந்திவிட்டு நித்திரைக்குச் சென்ற நிலையில் மறுநாளான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெகியத்தகண்டி, சந்தன் மல்ல பகுதியினைச் சேர்ந்த கோப்ரல் அலுவத்த மங்கல திஸாநாயக்க (வயது-27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித் துறைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் சடலத்தினை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காகச் சேர்ப்பித்தனர்.
No comments
Post a Comment