Latest News

September 07, 2015

நாங்கள் எங்கே தவறு விட்டோம்...???
by admin - 0

நாங்கள் எங்கே தவறு விட்டோம்...???

ஒரு தட்டில் உணவுண்டு ஒன்றாய் படுத்துறங்கி, ஒன்றாய் களம் கண்ட தோழர்களை சந்திக்கும் போது துள்ளி ஓடும் மனதுக்கு கடிவாளம் போட்டுத் தடுக்க முடியவில்லை. லண்டனைப் போலவே பிரான்ஸ், ஜெர்மன், சுவிஸ் போன்ற நாடுகளுக்குப் பயணப்பட்ட போது எம் தாய் நிலத்தின் ஏக்கம் வாட்டியது. மகிழூந்தின் ஒரு மாலைப் பயணத்தின் போது எனது கற்பனைக்குக் கடிவாளம் போட்டது என் நண்பனின் கேள்வி.!! 

"மச்சான்.! எங்கள் இனம் தான் மூத்த இனம் என்கிறார்கள். உலகில் நான்கில் ஒரு பங்கை ஆண்டதாக சொல்கிறார்கள், உலகுக்கு நாகரிகம்,தற்காப்பு, மருத்துவம், அறிவியல் எல்லாம் நாங்கள்தான் சொல்லிக் கொடுத்தோம் என்கிறார்கள்..! எல்லாம் இருந்தும் ஏன் எங்களுக்கொரு நாடு இல்லாமல் போனது ??" 

"நாங்கள் எங்கே தவறு விட்டோம்?" 

இந்தக் கேள்வி கேட்ட பின் அவனது வேதனை எனக்கு புரிந்தது. இந்தக் கேள்வி என்னுள் பல தடவை எழுந்துள்ளது. புலம் பெயர்ந்த பின் அந்த ஏக்கம் எம்முள் கூடித்தான் போய்விட்டது. இந்தக் கேள்விக்கான விடையை இங்கிருந்து பாக்கும் போது தான் புதிய பார்வை ஒன்று என்னுள் தோன்றியது. இங்கு உள்ளவர்கள் ஒரு நாட்டைக் கைப்பற்றிய பின் அந்த நாட்டில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு புதிய படைக்கள தளபாடங்களுக்கான ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார்கள்.

படை கட்டமைப்பை இறுக்கமாகப் பேனியுள்ளார்கள். அத்தோடு துறை சார் ஆராய்ச்சிகளை மக்களிடத்தில் கூட்டி உள்ளார்கள். தங்கள் நாடுகளுக்கு எல்லை வகுத்து அதில் இறுக்கமாகவும் இருந்துள்ளார்கள். இவைகளை தங்கள் அடுத்த சந்ததிக்கும் கடத்தியுள்ளார்கள். அவர்களும் அதை தொடர்ந்துள்ளார்கள். 

அப்போது நாம் என்ன செய்துள்ளோம்.???? 

நாடுகளை கைப்பற்றிய பின் அங்கு கிடைத்த செல்வங்களை கொண்டு போகும் இடமெல்லாம் கோவில்களை கட்டி உள்ளோம். மிகுதி செல்வங்களை கோவில் கருவூல அறைகளில் பதுக்கி வைத்துள்ளோம் (சமீபத்தில் கோவில் ரகசிய அறைகளில் இருந்து 10 ஆயிரம் கோடிக்கு மேல் பொன், பொருள் இருந்ததாக படித்தேன்) நாட்டுக்கு எல்லை போடவில்லை, அதட்கான காவலையும் இறுக்கவில்லை, புதிய இராணுவத் தளபாட ஆராய்ச்சியில் ஈடு படவில்லை. ஒட்டு மொத்தத்தில் கடவுள் பெயரால் நாதி அற்று திரிகிறோம்.

இதை நான் கூறும் போது குறுக்கிட்ட நண்பன் கூறினான்.... 

"மச்சான் அண்ணை (தலைவர் பிரபாகரன்) அந்த காலத்தில பிறந்திருந்தா தமிழனுக்கு குறைஞ்சது 5 நாடாவது இருந்திருக்கும்.!! நாங்கள் தான் உலகத்தில முதலாவது வல்லரசாகவும் இருந்திருப்பம்...!!!"

அவனது கூற்றில் உண்மையும் இருந்ததது ஏனெனில் தேசியத் தலைவர் எங்கள் எல்லா வளங்களையும் படை கட்டமைப்புக்கும், படைத்துறை தளபாட உற்பத்திக்கே செலவிட்டார்...!!!

அன்பர்களே இது என் கருது மட்டுமே, இதை நான் யார் மேலும் திணிக்கவில்லை... 

- ஈழத்து துரோணர்.

http://eelamthuronar.blogspot.com/2015/09/thavaru.vittom.html

« PREV
NEXT »

No comments