Latest News

September 26, 2015

போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியே முற்று முழுதாக பொறுப்பு கூறவேண்டும் : விக்கிரமபாகு கருணாரத்ன
by admin - 0

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம் பெறு­வ­தோடு போர்க்­குற்­றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவே முற்று முழு­வ­து­மாக பொறுப்பு கூற வேண்­டி­யவர் என கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.


ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளியிட்­டுள்ள விசா­ரணை அறிக்­கையை முன்­னி­லைப்­ப­டுத்தி இன­வா­தத்தை கட்­ட­விழ்த்து விட முயற்­சிக்கும் பாசிச குழுக்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தோடு சர்­வ­தேச நாடு­களின் நம்­பிக்கை பிர­காரம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டவும் மூவின மக்­களின் உரி­மை­களை பாது­காக்­கவும் ஐக்­கிய நாடு­களின் பரிந்­துரைகளை நிறை­வேற்ற இந்த சந்­தர்ப்­பத்தை தேசிய அர­சா­னது உரி­ய­வாறு பயன்­ப­டுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.

கொழும்பில் அமைந்­துள்ள நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­திகள்இ சட்­ட­த்த­ர­ணிகள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய விசே­ட­க­லப்பு நீதி­மன்றம் ஒன்றை அமைத்து விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம் பெற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

இத­னி­டையே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் யுத்த நட­வ­டிக்­கையின் போது இடம் பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய வகையில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க வேண்டும் என்ற அடி­ப்ப­டையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள விசா­ரனை அறிக்­கையை நாம் வர­வேற்­கின்றோம்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஆட்­சியை முன்­னெ­டுத்த பாசிச குழு­வி­ன­ரி­னது சில மோச­மான செயற்­பா­டுகளின் மத்­தி­யி­லேயே யுத்­தத்தின் இறு­திக்­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்­த­வ­கையில் இன்று யுத்­தக்­கா­லப்­ப­கு­தியில் இடம்பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெளியிட்­டுள்ள விசா­ரணை அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ரு­கின்ற விட­யங்கள் தொடர்பில் முன்­னைய ஆட்­சியின் அர­சியல் பிர­மு­கர்கள் உட்­பட முன்னாள் ஜனா­தி­ப­தியே பொறுப்புக் கூற வேண்டும்.

கடந்­த ­கா­லங்­களில் நாட்டில் சட்டம் மற்றும் நீதித்­துறை என்­பன சர்­வ­ாதி­கார சக்­தி­க­ளிடம் அடிப­ணிந்து காணப்­பட்­டது இவ்­வா­றான நிலை­யி­லேயே ஊட­க­வி­ய­லா­ளர்கள்இ றக்பி வீரர்கள்இ சர்­வா­தி­கார ஆட்­சிக்கு எதி­ராக செயற்­பட்ட அர­சியல் பிர­மு­கர்கள் என பல்­வேறு தரப்­பினர் கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டனர்.இது தொடர்பில் அர­சா­னது உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

இவ்­வா­றான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் போது இரா­ணு­வத்­தினர் அச்சம் கொள்ள தேவை­யில்லை காரணம் கடந்­த கா­லங்­களில் நாட்டை பயங்­க­ர­வா­தி­க­ளிடம் இருந்து மீட்­டெ­டுக்க இரா­ணு­வத்­தினர் உண்­மை­யான அர்ப்­ப­ணிப்பை முன்­னெ­டுத்த போதிலும் சர்­வா­தி­கார ஆட்­சியின் கீழ் செயற்­பட்ட தரப்­பி­னரின் கட்­டு­ப்பாட்­டுக்குள் சிக்கி மோச­மான முறையில் இவர்கள் வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே இன்று நாட்­டுக்­காக போரா­டிய வீரர்கள் சர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் குற்­ற­வா­ளி­யாக நிற்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

எனவே புதிய அர­சா­னது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் வெ ளியிட்­டுள்ள பரிந்­து­ரைகள் தொடர்பில் கவனம் செழுத்­து­வ­தோடு விசா­ர­ணைகளை உரிய முறையில் செயற்­ப­டுத்த வேண்டும். ஐக்­கிய தேசி­யக்­கட்சிஇ ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இன்று அமைச்சு பத­விகள் தொடர்பில் முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­ப­டு­வ­தோடு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆத­ரவு தரப்­பி­ன­ரினால் இன­வாத செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இவர்­களே தேசிய அர­சாங்­கத்தின் நல்­லாட்சி செயற்­பா­டு­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். கடந்த பொது தேர்­தலில் அனைத்து சிறு­பான்­மை­யின மக்­களும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்­திற்கே தமது ஆத­ரவை வழங்­கினர் அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கீழ் தோற்­று­விக்­கப்­பட்ட தேசிய அர­சா­னது சிறு­பான்­மை­யின மக்­களின் உரி­மை­களை பாது­காக்க உரிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தேசிய அரசாங்கத்தின் கீழ் இன்று தொழிற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் இன்று மூவின மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் ஒரே பாதையிலேயே பயணிக்கின்றனர். இவ்வாறான நிலையில் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் எமது நாட்டின் மூவின மக்களின் வாழ்க்கை தரத்தையும் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் துணை நிற்க வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments