Latest News

September 26, 2015

தியாகம் என்றால்... திலீபன்.!!
by அகலினியன் - 0

தியாகம் என்றால்... திலீபன்.!!

அண்ணா, உன்னைப் பாடா 
வார்த்தைகள் தேடுறேன்..... 
வரவில்லை...
கிடைக்கவும் இல்லை.!!

உன் தியாகம்..... சொல்ல...
நான் எங்கே போவேன்
தமிழ் இலக்கனத்தில்
இல்லை ஒரு வார்த்தை.....

தியாகம்.. என்ற சொல்லின் நீ
ஒத்த சொல்....

யாகம் என்ற சொல்லுக்கு....
நீ பொருளானாய்!

அண்ணா, தியாகத்தை யாரும்
பார்க்கமுயாது....... ஆனால்
உன்னால்... நாம் கண்டோம்
தியாகத்தை...... திலீபனாக...

கதறியது......
தமிழீழமே.. உனக்காக.....
நீயோ எமக்காக...... 
நல்லூர் விதியிலே....
சிரித்த முகத்துடன் ..
சிம்மாசனம்... இட்டு....
பாரதத்துடனேயே போர்தொடுத்தாய்....

கனத்த கனவுகளை நினைத்தே
சுமந்தாய் அண்ணா......
உன்னத தியாகங்களை
உயிர்ப்புடன் புரிந்தாய் அண்ணா

விருப்பு வெறுப்புக்களை
நெருப்பில் போட்டு
பாரிய பொறுப்புக்களை
பாசமுடன் சுமந்தாய் அண்ணா!

விடுதலை விரும்பிகளாய்
தலைவன் வழியில் அவர்
காட்டிய பாதைகளில்
காற்றாய் சுழன்றாய் அண்ணா!

வீரச் சமர் புரிந்திட
வீர வேங்கைகளாய்
உருமாறி புலியாகி
களம் பல கண்டாய் அண்ணா!

பற்றுறுதி கொண்டு
வெற்றிக்கு மேல்
வெற்றிகளால் வாகை சூடிச் 
சென்றாய் அண்ணா.!

தமிழரின் மலர்வுக்காய்
உன்னை மெழுகாய். உருக்கினாய்....
கள காவியம் படைத்து - எம்
நெஞ்சில் ..........
கல்லறைப் பூக்களாகினாய்.

நினைவுகளைச் சுமந்து
திருப்பாதங்களை
கண்ணீர்ப் பூக்களால்
கழுவிக் கொள்கிறோம் அண்ணா!

தமிழ் வாழும் காலம் வரையில்
உன் திரு நாமமும் வாழும் தீலீபன்அண்ணா!

'தமிழரின் தாகம்' 'தமிழீழ தாயகம்'

« PREV
NEXT »

No comments