இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு, இந்திய அரசாங்கம் திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த பிரேரணைக்கு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் ஆதரவை தெரிவிக்கும் என்றும், இந்த பிரேரணையின் இறுதி வடிவம் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக, இந்தியா திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜெனீவாவில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கும் இந்தியா திருத்த யோசனைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment