ஜெனீவா அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடாத்துமாறு விமல் வீரவங்ச சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
அதில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, ஜெனீவா அறிக்கை போலியான ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை சாக்காக வைத்துக் கொண்டு கலப்பு நீதிமன்றம் என்ற பெயரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளையொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இது நாட்டுக்கும், ராணுவத்தினருக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
அரசாங்கம் இந்த உண்மைகளை மறைத்து ஜெனீவா அறிக்கை நாட்டுக்கு சாதகமான முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
எனவே இந்த அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஜெனீவா அறிக்கை தொடர்பான விவாதத்துக்கு ஒரு நாளை ஒதுக்கித் தரவேண்டும் என்றும் விமல் வீரவங்ச தனது கடிதம் மூலமாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளார்.
No comments
Post a Comment