Latest News

September 20, 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளை உருவாக்கியது பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தான்: ஜெரிமி கார்பியன் குற்றச்சாட்டு
by Unknown - 0

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை மேலும் வலுவான சக்தியாக உருவாவதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் தான் காரணம் என பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் பகிரங்க குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

பிரித்தானிய எதிர்க்கட்சியாக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெரிமி கார்பியன் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டார்.

பிரித்தானிய நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து பல்வேறு வாதங்களை முன்நிறுத்தி வரும் ஜெரிமி அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ஐ.எஸ் தீவிரவாதிகள் உருவாவதற்கு மேற்கத்திய நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் தான் முழுக்காரணம் என பகிரங்கமாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

மேலும், மேற்கத்திய நாடுகளின் லட்சக்கணக்கான டொலர்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் இறுதியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தான் சென்றடைகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது பயங்கர ஆயுத தாக்குதல் நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை. தீவிரவாதிகளை தாக்குவதன் மூலம் அவர்களை மேலும் வலுப்பெற செய்யும் காரியத்தில் தான் மேற்கத்திய நாடுகள் ஈடுப்பட்டுள்ளன.

பிரித்தானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனில் அதனை மனித உரிமைகளை காப்பதில் மட்டுமே சாதிக்க முடியும்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை முடக்க வேண்டும் என்றால் அந்த இயக்கத்தை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்த வேண்டும். பின்னர், சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள குர்து இனத்தவரை ஒன்றிணைப்பதுடன் தீவிரவாதத்தை தடுக்க முடியும் என ஜெரிமி கருத்து தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments