Latest News

September 04, 2015

நெருக்கடிக்கு பணிந்தார் டேவிட் கெமரூன்-அதிக எண்ணிக்கையில் அகதிகளை குடியமர்த்த பிரித்தானிய அரசு முடிவு
by Unknown - 0

ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாடுகளின் எச்சரிக்கையின் விளைவாக அதிக எண்ணிக்கையில் அகதிகளை குடியமர்த்த பிரித்தானிய நாட்டின் பிரதமரான டேவிட் கெமரூன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேற வருபவர்கள் சந்திக்கும் இடையூறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் எண்ணைக்கையை கருத்தில் கொள்ளாமல், டேவிட் கெமரூன் புலம்பெயர்ந்தவர்களை நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தது, பிற ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், புலம்பெயர்ந்தவர்கள் மீது பிரித்தானிய அரசு இரக்கம் காட்ட வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

டேவிட் கெமரூனின் குடியமர்வு கொள்கை முடிவுகள் பிரித்தானிய நாட்டிற்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பிரதமர் உடனடி தீர்வு காண வேண்டும் என ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

பிற ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடி நிலையை ஈடுக்கொடுக்க முடியாது கெமரூன் தற்போது அதிக எண்ணிக்கையில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட ஆப்பிரிக்கா, எரித்தியா மற்றும் சிரியா நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை குடியமர்த்துவது தொடர்பான கொள்கை முடிவுகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாக பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஆனால், எவ்வளவு எண்ணிக்கையில் குடியமர்த்த உள்ளனர் என்ற குறிப்பிட்ட தகவல் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான புள்ளிவிபரத்தில், இந்தாண்டு யூன் மாத இறுதி வரை 25,771 பேர் குடியமர்வு கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இவர்களில் 11,600 நபர்களுக்கு குடியேற்ற அனுமதி அரசு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments