Latest News

September 04, 2015

அகதிகள் வரவேற்கப்படுகின்றார்கள்” ஐரோப்பிய அரசின் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களின் கோஷங்கள்
by Unknown - 0

ஐரோப்பிய அரசாங்கம் அகதிகளை உள்வாங்க மறுத்துவரும் நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டுப் போர்கள் காரணமாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தஞ்சம் கோரி அகதிகளாகச் செல்வது அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் அகதிகளின் வருகையைக் கட்டுக்குள் கொண்டுவர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

மறுபுறம் மக்கள் அகதிகளுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராடத் துணிந்துவிட்டனர்.

இதேவேளை, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சுமார் 20,000 பேர் பேரணி ஒன்றை நடத்தி தாம் அகதிகள் வருகைக்கு ஆதரவு தெரிவிப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரியாவின் தேசிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த லொறியிலிருந்து 71 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டமை நினைவிருக்கலாம்.

இது ஐரோப்பிய மக்கள் மத்தியில் பாரியதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, ஜெர்மனியில் நடந்த கால்பந்து போட்டியில் அகதிகளுக்கு ஆதரவு வழங்கும் விதமாக பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், 220 அகதிகள் போட்டியைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது, அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் என எழுப்பப்பட்ட கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது.

இந்நிலையில், நோர்வேயிலும் அகதிகளுக்கு ஆதரவான கோஷங்கள் வலுத்து வருகின்றன.

நேற்றைய தினம் துருக்கியில் கடற்கரையோரமாய்க் கண்டெடுக்கப்பட்ட சிரிய அகதிச் சிறுவனின் புகைப்படம் இணையப் பாவணையாளர்கள் பலரதும் கண்ணீருக்குக் காரணமாய் அமைந்ததை மறக்கவியலாது.
« PREV
NEXT »

No comments