Latest News

September 30, 2015

ரொய்ரெர்ஸ் செய்தி கவலையளிக்கின்றது : ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நலன்களுக்கு மாறானவர்கள் அல்ல !
by Unknown - 0

இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரநீதிவேண்டி போராடிவரும் ஈழத் தமிழினம் இந்தியாவின் நலன்களுக்கு மாறானவர்கள் அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மான நகலை இந்தியா பலவீனப்படுத்தியதாக ரொய்ரெர்ஸ் வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொழுதே இதனை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

http://www.reuters.com/…/us-sri-lanka-warcrimes-idUSKCN0RT1…

அமெரிக்காவின் தீர்மான நகலில் "international" என குறிப்பிட்டப்பட்டிருந்த வாக்கியங்களை "foreign"ஆக மாற்றியத்தில் இருந்து பல்வேறு திருத்தங்களை இந்தியா மேற்கொண்டிருந்ததாக தெரிவித்திருந்த ரொய்ரெர்ஸ் செய்திக்குறிப்பு, இந்தியாவின் கஸ்மீர் விவகாரத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைவராதிருப்பதன் அடிப்படையிலேயே இத்தகைய திருத்தங்களை இந்தியா மேற்கொண்டிருந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சுதன்ராஜ்,

ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மான வரைவினை இந்தியா வலுப்படுத்துதோ அல்லது வலுவானதொரு தீர்மானத்தினை ஐ.நா மனித உரிமைச்சபையில் இந்தியா முன்வைப்பதோ எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தமிழக மக்களின் மனச்சாட்சியினை பிரதிபலிக்கின்ற வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இதனையே வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் வெளிவந்துள்ள இச்செய்தி எமக்கு கவலையளிப்பதாகவுள்ளது.

வரலாற்றுரீதியாக இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை தொடர்பில் பல தேசங்களைக் கடந்த அமெரிக்காவுக்கு உள்ள அக்கறைக்கு அப்பால் அருகில் உள்ள இந்தியாவுக்கே அதிக பொறுப்புள்ளதாக நாம் கருதுகின்றோம்.

துரதிஸ்டவசமாக ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் வடுக்களையும் இடைவெளியினையும் ஏற்படுதுகின்ற வகையில் இந்தியாவினை சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றார்கள் என்பதனையே வெளிவந்துள்ள இச்செய்தி எடுத்துக் காட்டுகின்றது என அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments