சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தும் கோரிக்கையோடு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்து வருகின்றனர்.
சிறிலங்கா தொடர்பில் விசேட சபை ஒன்றினை அமைக்கும் தீர்மானம் ஒன்றினை அமெரிக்க தலைமையிலான கூட்டு நாடுகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்ற எத்தனித்துள்ள நிலையில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் பதின்நான்கு இலட்சம் கையொப்ப மனு இச்சந்திப்புக்களில் கையளிக்கப்பட்டு வருகின்றன.
No comments
Post a Comment