Latest News

September 25, 2015

மாற்றுத்திறனாளியை தாக்கிய ஶ்ரீலங்கா காவற்துறை
by admin - 0

ஶ்ரீலங்கா  காவற்துறையினர் மனிதாபிமானற்ற வகையில், ஒரு காலை இழந்த நபரை தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நகரில் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இந்த நபரை போக்குவரத்து காவற்துறையினர் மனிதாபிமானமின்றி தரையில் போட்டு கடுமையாக தாக்கியதாக பிரதேச வாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலை இழந்த நபர் மோட்டார் சைக்கிளில் கஹட்டகஸ்திகிலிய நகருக்கு வந்துள்ளார். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கடமையில் இருந்த இரண்டு காவற்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.

காவற்துறையினரின் கட்டளை மீறி சென்ற இந்த நபரை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பிடித்து கொண்ட போக்குவரத்து காவற்துறையினர் தாக்கியுள்ளனர். அப்போது இந்த நபர் பொருத்தியிருந்த செயற்கை கால் கழன்று விழுந்துள்ளது.

காவற்துறையினர் குறித்த வலது குறைந்த நபரை தாக்கும் போது நகரில் இருந்த பெரும்பாலான மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை காவற்துறையினர் கைது செய்ததாகவும் அப்போது அந்த நபர் காவற்துறையினரை கடித்து, தாக்கியதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்

« PREV
NEXT »

No comments