செவ்வாய் கிரக பனிப்புயலில் தனித்து விடப்பட்ட மனிதனின் கதையைச் சொல்லும் படமாக உருவாகிறது த மார்ஷியன். செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய செல்லும் குழுவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் வாட்னி, அங்கு ஏற்படும் ஒருப் பயங்கரமான பனிப் புயலில் இறந்து போனதாக நினைத்து அவரை விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
ஆனால் அவரோ அந்தப் பனி புயலில் இருந்து தப்பி அந்த கொடூரமான சூழ்நிலையில் தனித்து விடப்படுகிறார். உயிர் வாழ வாய்ப்பு இல்லாத அந்த இடத்தில் இருந்து, தகவல் தொடர்ப்பு சாதனங்கள் செயல் இழந்த சூழலில், அவர் தான் உயிரோடு இருப்பதை பூமிக்கு அறிவிக்க முயற்சிக்கிறார். நாசா விஞ்ஞானிகள் அவரைக் காப்பாற்ற முயற்சிக்க, அவருடன் பணிப் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அந்த காப்பாற்றும் முயற்சியை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.
இந்த சூழ் நிலையில் சர்வதேச நாடுகள் வாட்னி பூமிக்கு திரும்ப வர முயற்சி மேற்கொள்கின்றன. இந்தக் கதை ஒரு பிரபலமான நாவலை தழுவி படமாக்கப் பட்டுள்ளது. மேட் டமோன், ஜெஸிகா சஸ்டய்ன், கிர்ஸ்டன் விக், கதே மாரா நடித்துள்ள இந்தப் படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கியுள்ளார்.
No comments
Post a Comment