கொடதெனியாவில் 5 வயது சிறுமி சேயா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் இவர் நேற்றையதினம் பிரதேசவாசிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேகநபர், குறித்த சிறுமி வசித்த வீட்டுக்கு அருகாமையில் தற்காலிகமாக வசித்த ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment