Latest News

October 01, 2015

மஹிந்தவை காட்டிக் கொடுத்து அரச சாட்சியாளர்களாக மாற மேலும் இருவர் தயார்!
by admin - 0


ராஜபக்ஷ தலைமையில் பாரிய டீலை அம்பலப்படுத்தவென அந்தத் தலைமையின் முக்கிய நபர் ஒருவர் தயார் நிலையில் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வேறு யாருமல்ல இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியன் பந்து விக்ரமமுனி ஆவார்.

ராஜபக்ஷ தலைமையின் கீழ் பாரிய ஊழல் மோசடி நிறுவனமாக விளங்கிய துறைமுக அதிகார சபை மற்றும் ராஜபக்ஷ அமைப்பு போன்றவற்றின் ஊடக மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழில் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் அளித்த அவர் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ நிறுவன தலைவராக பசில் ராஜபக்ஷவின் பிரதான கையாள் விலி கமகே செயற்பட்டுள்ளதுடன், பிரியன் பந்துவிக்ரமமுனி செயலாளராக செயற்பட்டுள்ளார். இந்த நிறுவனம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட நிதி மோசடி பிரிவு என்பன விசாரணை நடத்தி வருகின்றன. அதன்படி விலி கமகே மற்றும் பிரியன் ஆகியோர் கைது செய்யப்படவுள்ளனர். ஆனால் பந்துவிக்ரமமுனி தனது மனைவி ஊடாக பிணை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் உள்ளார். அதுபோன்று விலி கமகேவும் சஜின், பந்து ஆகியோர் வழியை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
« PREV
NEXT »

No comments