நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமை;பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கஞ்சிரங்குடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி பற்றி பேசினாலும் நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பல நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகமே சர்வதேச சமூகம் இன்று தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்த ஏதுவாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த தியாகங்கள் ஒர் நாள் தமிழ் மக்களுக்கு விடிவைக் கொண்டு வரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்திலும் எவ்வித வழக்கும் தொடராமல் விசாரணைகளையும் நடத்தாமல் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம்செய்துகொண்ட தன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி இலக்குகளை விடவும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகள் வழங்கப்பட வேண்டியதே முதன்மையானது எனவும், இதனையே தந்தை செல்வாவும் வலியுறுத்தி வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment