Latest News

September 28, 2015

Facebook சமூக வலைத்தளம் தற்காலிகமாக செயலிழப்பு !
by Unknown - 0

அனைவரையும் கவர்ந்து தன்னகத்தே வைத்திருக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதால் உலக மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாக அறியமுடிகின்றது.

பேஸ்புக் இல்லாமல் போனால் நம்மால் எதுவும் செய்யமுடியாது என நினைக்கும் பேஸ்புக் பயனாளர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

அண்மையில் மோடிகூட சொல்லி இருந்தார் பேஸ்புக் ஒரு நாடாக இருந்திருந்தால்...... உலகின் சனத்தொகை அதிகமாக உள்ள நாடாக பேஸ்புக் இருந்திருக்கும் என.

அந்தளவுக்கு பேஸ்புக் இல்லாமல் ஒருவரும் இருந்ததில்லை.. ஆனால் இன்று பேஸ்புக் முடக்கப்பட்டிருப்பதனால் அனைவருக்கும் கைகள் செயலிழந்து காணப்படுவதாக  உலகளாவிய ரீதியில் பயன்படுத்தும்  பேஸ்புக் பயனாளார்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக ஆங்கிலச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மாபெரும் சமூக வலைத்தளமான பேஸ்புக், அனைவரையும் ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாக இருந்த பேஸ்புக் இன்று வேலை செய்யாமல் இருப்பதற்கு இதன் பின்னணியில் யாருளர்.. என்ன நடந்தது பேஸ்புக் க்கு.... என்ற கேள்விக்கு விடையின்றி தவிக்கும் பேஸ்புக் பயனாளர்களுக்கு என்ன பதில்....?

இந்த வாரம் இவ்வாறூ பேஸ்புக் முடக்கப்பட்டமை இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் 12 நிமிடங்கள் பேஸ்புக் முடக்கப்பட்டது. ஆனால் இன்றோ கடந்த 1 மணி நேரமாகியும் முடக்கப்பட்ட பேஸ்புக் மீள்பாவனைக்கு வரப்படவில்லை என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, இன்று வேலை நாளான திங்கட்கிழமை எந்தவொரு அறீவிப்புமின்றி பேஸ்புக் முடக்கப்பட்டமையானது சில நிறுவன உயரதிகாரிகளையும், சில நாட்டு அமைச்சர்களையும் கோவமடையச் செய்துள்ளது என மேலும் ஆங்கிலச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக் இல்லாததனால் உலக மக்கள் அனைவரது பேஸ்களும் வாடிப்போயுள்ளதாக மற்றுமொரு சமூகவலைத்தளமான  டுவிட்டரில் நையாண்டியாக கருத்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. 
« PREV
NEXT »

No comments