ஐ.நா., சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக நாடுகள் ஒத்துழைப்புடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரதமர் தனது உரையில், இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி, வங்கிக்கணக்குகள் துவக்கம், தூய்மை இந்தியா மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். ஐ.நா., சபையில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது...
நாம் மனிதாபிமானத்திற்காக இங்கு கூடியுள்ளோம். உலகில் வறுமையை ஒழிப்பது மிகப்பெரிய சவால் மற்றும் நமது கடமை. உலகில் 1.3 பில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வறுமையில்லா உலகை நாம் உருவாக்க வேண்டும். நீல புரட்சியை நான் வரவேற்கிறேன். அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவை வறுமையை ஒழிப்பதில் தொடர்பு உள்ளது. வறுமையை ஒழிப்பது முக்கியமான திட்டமாகும். உலகம் முன்னேற வேண்டுமானால், வறுமையை ஒழிக்க வேண்டும் என கூறினார்.
இந்தியா வளர்ச்சிக்கான பாதையை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் 180 மில்லியன் வங்கிக்கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாடு ஆகியவை இந்தியாவின் நோக்கமாகும். ஏழைகளுக்கு வீடு வழங்குவது எங்களது இலக்கு. இந்தியாவில் பெண்களுக்காக பல நலத்திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. உலகை தாயாக பாவிக்கும் நாட்டிலிருந்து வந்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது எங்களது நோக்கமாகும். பெண்களை காப்போம் என்ற கோஷம் இந்தியாவில் உள்ள அனைவரது வீடுகளிலும் ஒழிக்கிறது.
இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி நிர்மானிக்கப்படுகிறது. தினத்திறன் மேம்பாடு சுய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தூய்மை இந்தியா, நதிகள் சுத்தப்படுத்துதல் ஆகிய திட்டத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். விவசாயத்தை இன்னும் சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். பருவநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவி அளிக்கப்படுகிறது. இந்த உலகம் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள், தனி நபர் துறை பற்றி பேசுகிறோம். இது தனிநபர்களை வளர்ச்சி பெற உதவும்.
பருவநிலை மாற்றத்தை சுயநலத்தோடு அணுகக்கூடாது. நிலைக்கத்தக்க வளர்ச்சி திட்டத்தை இந்தியா வரவேற்கிறது. இது மிகவும் முக்கியமானதாகும். இந்த திட்டத்திற்கு அனைத்து நாடுகளும் பொறுப்பாகும். சிறப்பான உலகம் அமைய இந்த திட்டம் மிகவும் முக்கியமானது. இந்த உலகம் அனைத்தும், இணைக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளது.
அனைவரும் பாதுகாப்பாகவும் மரியாதையாகவும் வசிக்கும் உலகை நாம் உருவாக்க வேண்டும். ஐ.நா.,வில் சீர்திருத்தம் கொண்டு வருவது முக்கியம். வளமுடன் வாழ்வோம். நலமுடன் வாழ்வோம். வளர்ச்சியை காணுவோம். யாரும் கவலையை பார்க்கக்கூடாது. இவ்வாறு தனது உரையை பிரதமர் முடித்தார்.
No comments
Post a Comment