Latest News

September 30, 2015

அரசியல் கைதிகளின் நிலமை அரசியலாக்கப்பட்டுள்ளது :வடக்கு முதல்வர்
by Unknown - 0

இலங்கையில் அரசியல் கைதிகளினுடைய நிலமை அரசியலாக்கப்பட்டுள்ளது.அதனால் தான் அவர்களுடைய பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுவதாக இல்லை என்று, வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அவர்களது பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்ட ஒன்றினை முன்னெடுத்து போராட்ட முடிவில் வடக்கு முதல்வரிடம் மகஜர் கையளித்தனர்.இதன் பின்னர் வடக்கு முதல்வர் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபை பதிவியேற்றதன் காலத்தில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கலந்துரையாடிக் கொண்டே இருக்கிறோம். எனினும் இவர்களது பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை.அரசியல் கைதிகளின் வழக்கு விரைவிலே முடியும் என்று கூறினாலும் அவர்களது வழக்கு முடிய காலதாமதமாகும்.அதுமட்டுமல்ல கைதிகள் சார்பில் ஆஜராகி வழக்கை தொடரும் சட்டத்தரணிகள் சொற்பம்.எனினும் கைதிகளுக்காக ஆஜராக முன்வருபவர்களுக்கு பணத்தை கொடுக்க அரசியல் கைதிகளிடம் போதிய பணமுமில்லை.

ஆகவே அரசியல் கைதிகளுக்கு ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கான அமைப்பு ஒன்றை அமைத்து அதனூடாக சட்டத்தரணிகளுக்கு பணத்தை வழங்க முடியும்.

அரசியல் கைதிகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமையவல்ல அரசியல் காரணங்களுக்காகவே கைது செய்து அவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை வாட்டுகின்றனர்.

மேலும் ஜெனிவாவில் நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியானதும் அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில், சில நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என நாம் நம்புகின்றேன்.அரசின் நல்லெண்ணத்தின் பயனாக அரசியல் கைதிகளை விடுவிப்பார்கள் என்று எண்ண இடமிருக்கிறது.

எனவே அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த ஓரிரு மாதங்களுக்கு பின்னர் மீளாய்வு செய்வோம் என்பது தான் தற்போதைய நிலவரம் என அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments