Latest News

September 08, 2015

பதவிதுறப்பேன் அனந்தி அதிரடி முடிவு
by admin - 0

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவிதுறக்க தாயாராக இருப்பதாக அக்கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என அறிவித்துள்ளது.

அத்துடன் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியாதென மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவாவுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து அனந்தி சசிதரனிடம் கருத்து கேட்டபோது,

வடக்கு மாகாண சபை அவைத்தலைவரின் இந்த கருத்து எனக்கு மனவேதனையை அளிக்கின்றது. நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், சமூக ஆர்வளராகவுமே ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்ள செல்கின்றேன்.


ஜெனீவா அமர்விற்கு செல்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாட்டை கட்சியின் உயர்பீடம் அறிவிக்க வேண்டும்.

எனினும் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்வதற்கான அனுமதியை கட்சியின் தலைமைப்பீடம் மறுத்தால் பதவியை இராஜினாமா செய்வேன் என்றார்.

« PREV
NEXT »

No comments