Latest News

August 02, 2015

சர்வதேச விசாரணையே வேண்டும்-தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி
by admin - 0

தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். இலங்கை அரசாங்கம் குறிப்பிடுவது போன்றதான உள்ளகப் பொறிமுறையை தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி ஏற்றுக் கொள்ளாத அதே வேளையில் அத்தகைய விசாரணையை நிராகரிப்பதாகவும் அக் கட்சியின் பேச்சாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் அதற்கு முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் என்ன என்பதனை யாழில் போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் முன்வைத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் இனவழிப்பு தான். இனவழிப்பு மேற்கொள்ள வேண்டுமென்ற நொக்கோடே சிங்கள ஆட்சியாளர்கள் காலங்காலமாக செயற்பட்டு வருகின்றனர். இதில் பிரதானமாக பகிரங்கமாகவே செயற்பட்டு வந்தவர் தான் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச.

இங்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு தமிழ் மக்கள் நீதி வேண்டி நிற்கின்றனர். அந்த நீதி சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டு கிடைக்க வேண்டுமென்றுமு; அதனூடாக இனப்பிரச்சனைக்கும் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றுமே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கினற்னர்.

இவ்வாறான சர்வதேச விசாரணையையே நாம் தொடர்ச்சியாக வலியுறுது;தி வருகின்றோம். ஆனால் இதனை இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில் இந்த மக்களின் பிரதிநிதிகள் உன்று சொல்கின்ற தரப்பினர்களும் அரசிற்கு பக்கபலமாகவே செயற்படுகின்றனர்.

இங்கு நிலை கொண்டிருக்கின்ற இரானுவம் இங்கிருந்து முற்றாக வெளியேற வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்த வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும. காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும்.

இங்கு இழைக்கப்பட் அடக்குமுறைகள் அநீதிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அதுவும் தத்தமது தற்காப்பிற்காகவே ஆயுதம் ஏந்தியவர்கள் அனைவரும் விடுவித்து மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் தமது; சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும். அது தான் உண்மையான நல்லிணக்கம். ஆனான் அத்தகையதொரு நல்லிணக்கம் இதுவரையில் ஏற்படு;தப்படவில்லை.
« PREV
NEXT »

No comments