Latest News

August 02, 2015

மில்லியன் கையெழுத்தில் இணைக-சிவாஜிலிங்கம்
by admin - 0

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் அனைவரையும் இணைந்திட சிறிலங்காவின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் பன்னிரண்டு இலட்சங்களை கடந்து செப்ரெம்பர் வரை நீண்டு செல்கின்றது.


இந்நிலையில் இக்கையெழுத்து இயக்கத்துக்கு உறுதுணை வழங்கும் பொருட்டு ஊடக அறிக்கையொன்றினை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் சிறிலங்கா அரசினாலும், அதன் ஆயுதப் படைகளினாலும் கொல்லப்பட்டதற்கு, சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஊடாக கோருவதன் மூலம், விசேட தீர்பாயம் போன்ற நடவடிக்கைகளை எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், போர் குற்றவாளிகளை நிறுத்தி தமிழினத்துக்கு நீதி கிடைக்கவும், அரசியல் தீர்வு கிடைக்கவும் வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கின்ற முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு உலகத் தமிழ் மக்களிடமும் மனித உரிமை ஆர்வலர்களையும் அன்புடனும் பணிவுடனும் வேண்டுகின்றேன் என அவ்வறிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகின்ற பெப்ரவரி 4ம் நாள் முதல் ஈழத்தமிழினம் இனவழிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள அரச கட்டமிப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமீழீத் தாயகப்பகுதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மில்லியன் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக வந்த அறிக்கை இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

www.tgte-icc.org


« PREV
NEXT »

No comments