Latest News

August 17, 2015

மக்கள் ஆணையை வழங்கினால் நிச்சயம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
by admin - 0

தமிழ் தேசிய அரசியல் விடுதலைப் பயணப் பாதையில் இன்றையநாள் நடைபெறும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

குறிப்பாக மாற்றத்திற்கான திறவு கோல் பிரச்சாரத்துடன் மீண்டழும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வாக்களிப்பதற்கு முன்னர் தேசத்திற்காய் மெழுகாய் உருகிய தியாகி திலீபனின் தூபி முன் தாழ்பணிந்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயார் சகிதம் வாக்கினை பதிவு செய்திருந்தார்.

சைக்கிள் அலைவீசுவதாக சொல்லப்படும் சூழலில் இளம் சமூகத்தினர் ஆர்வத்துடன் வாக்களிப்பினில் கலந்து கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

காலை முதல் குறிப்பிட்டு சொல்லத்தக்க வன்முறைகள் ஏதும் நடந்திராத போதும் காலை 10 மணிவரையினில் 28 சதவீத வாக்குகளே பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாக்களிப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ;-

  எமது நிலைப்பாட்டை நாம் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் எமது மக்களுக்கு நாம் தெரிவித்து வந்துள்ளோம். வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் இது ஒரு மிக முக்கியமான தேர்தல். எனவே தமிழ்மக்கள் அதை உணர்ந்து, அவர்களது ஜனனாயக கடமையை தவறாது நிறைவேற்றி புதிய அரசியல் கலாசாரத்திற்கான தலமைகளை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகின்றேன். எம்மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு ஆணையை வழங்கினால், நிச்சயமாக அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம்.


தமிழ் தேசிய அரசியலில் இத்தேர்தல் ஒரு திருப்புமுனை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களது தேசிய அரசியலைப்பொறுத்தமட்டில் இத்தேர்தல் ஒரு திருப்புமுனை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.இன்று(17)யாழ்ப்பாணத்திலுள்ள வக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கை செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
எமது நிலைப்பாட்டை நாம் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் எமது மக்களுக்கு நாம் தெரிவித்து வந்துள்ளோம், வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் இது ஒரு மிக முக்கியமான தேர்தல்.


எனவே தமிழ் மக்கள் அதை உணர்ந்து, அவர்களது ஜனனாயக கடமையை தவறாது நிறைவேற்றி புதிய அரசியல் கலாசாரத்திற்கான தலமைகளை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.
எம்மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு ஆணையை வழங்கினால், நிச்சயமாக அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம்.
எம்மை பொறுத்த வரையில் தமிழ் தேசிய அரசியலில் இந்த தேர்தல் ஒரு திருப்புமுனை என்றார்.

« PREV
NEXT »

No comments