சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழ் வேட்பாளர் கிருஸ்னானந்தம் தர்சிகா களமிறங்குகின்றார்.
அவருடைய வெற்றியை உலக தமிழினம் பெற்றுகொடுக்க முன்னவரவேண்டும் என்று தமிழ் உணவளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிஸ்சர்லாந்தில் தேசிய பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது இத்தேர்லில் பேர்ண் மாநிலத்தின் சோசலிச சனநாயகக் கட்சியின் ( எஸ் .பி ) சார்பாக போட்டியிடுகின்றார் தமிழ் மகள் தர்சிகா.
பேர்ண் மண்டலத்தில் 40,000 தமிழ் வாக்களர்கள் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வாக்களிக்கும் சந்தப்பத்தில் ஏனைய இனமக்களின் வாக்குபலத்துடன் தர்சிகா பாராளுன்ற உறுப்பினராக தெரிவாகும் சந்தர்மப்பம் அதிகமாக உள்ளது.
எனவே பேர்ண் மண்டலத்தமிழர்கள் அனைவரும் இந்த சந்தப்பந்தை பயன்படுத்தி ஈழதமிழ் தர்சிகா அவர்களை வெற்றி பெறவைப்பதின் மூலம் தாயகத்தில் நடைபெற்றது இனஅழிப்புதான் என்பதையும் தாயக உறவுகளுக்காக சுவிஸ்சர்லாந்து பாராளுமன்றத்தில் தமிழர் குரல் தொடர்தும் ஒலிப்பதையும் உறுதிப்படுத்துவோம்.
தற்போது தூண் நகரசபையின் பிரதிநிதியாக மற்றும் இணைவாக்கத் துறையின் அங்கத்தவராக சேவை செய்து அனைத்து இன மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளவர் மனிதநேயமுள்ள மக்களின்
குரலாகவும் ஈழத்தமிழர்களின் குரலாகவும் சுவிஸ் அரசியலில் கால்பதித்துள்ள தர்சிகா அவர்களுக்கு இந்த சந்தப்பத்தில் தமிழினம் தமது தார்மிக ஆதாரவை வழங்கவேண்டும்.
அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று இனைத்து தர்சிகாவின் வெற்றி என்பதுக்கு அப்பால் தமிழர்களின் வெற்றி என்பதை மனதில் நிறுத்தி பணியற்ற முன்வரவேண்டும் என தமிழ் உணவளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேட்பாளர்தர்சிகாவை தொடர்பு கொண்டு உங்களுடைய ஆதாரவு மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முகநூல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே அனைத்து தமிழ் மக்களும் இணைந்து சுவிஸ் பாராளுமன்றத்துக்கு தமிழ் பிரதிநிதியை அனுப்பிவைக்க அனைவரும் பணியற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Post a Comment