Latest News

August 21, 2015

தேசிய பட்டியல் விடயத்தில் கூட்டமைப்புக்குள் நெருக்கடி
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கும் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கூட்டமை ப்புக்குள் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

வடக்கிலிருந்து ஒருவரும் கிழக்கிலிருந்து ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலை யில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனத்தையும் பங் காளிக் கட்சிகளுக்கு ஒரு ஆசனத்தையும் வழங்குமாறு பிறிதொரு தரப்பு வலி யுறுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.

அதேநேரம், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலருக்கு தேசியப்பட்டி யல் மூலம் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வேட் பாளர்களான அருந்தவபாலன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆகியோருக்கு தேசியப்பட்டியல் மூலம் இடமளிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குமாறு கோரி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பம் முதல் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய தான் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்ததுடன் சர்வதேச ரீதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டேன். இந்த நிலையில், தனது தேவை தமிழ் மக்களுக்கு இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகளும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், யாழ். தேர்தல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகளின் போது முறைகேடு இடம்பெற்றிருப்பதாக சந்தேகிப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இது இவ்விதமிருக்க வடக்கிற்கு ஒரு தேசியப் பட்டியலும் கிழக்கிற்கு ஒரு தேசியப் பட்டியலும் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணம் சார்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைத் துவத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப் பதாகத் தெரிய வருகிறது.

தேசியப் பட்டியலை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக புளொட் தலைவரும் த.தே.கூட்டமைப்பு எம்.பியுமான சித்தார்த்தன் கருத்துத் தெரிவித்த போது, சுரேஷ் பிரேமச்சந்திரனை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமிக்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியைக் கேட்டுள்ளதாகக் கூறினார். 
« PREV
NEXT »

No comments