Latest News

August 14, 2015

எப்படியாவது வெற்றி பெற்றுகொள்ள உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை மேற்கொள்கிறார் சுமந்திரன்
by admin - 0

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தமது வெற்றிக்காக மக்களை முட்டாளாக்கும் வேட்பாளர்களால் மக்கள் இன்று அதிருப்தி அடைந்துள்ளார்கள். உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து தங்கள் வெற்றி அடைந்திடவேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளார்கள் இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்தால் மக்களை எப்படி மீண்டும் மீண்டும் ஏமாற்றுவார்கள்

இந்த வரிசையில் சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார்.

அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படியானவர்கள்?

சட்டவியல், அரசியல் அறிவும், ஆங்கில தமிழ் சிங்கள புலமையும், செயல் திறனுமுள்ள சுமந்திரனை பெரு வெற்றியடைய செய்வது உங்கள் வரலாற்று கடமையாகும் என வேண்டி நிற்கிறேன் என்று என்னுடைய படத்துடன் யாழ் பத்திரிகைகளில் விளம்பரமொன்று வந்ததாக எழுத்தாளர் நண்பர்கள் பலர் ஆச்சரியத்துடன் அறியத்தந்துள்ளனர். 

இது என்னுடைய ஒப்புதலுடன் வரவில்லை. இதற்கும் எனக்கும் தொடர்பில்லை. தாயக மக்களே தங்கள் தலைவர்களையும் அரசியலையும் தீர்மானிக்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் உணர்வுத் தோழமை (solidarity) அடிப்படையில் தோள் கொடுக்கலாம். Remote control அரசியலுக்கு நாங்கள் போக முடியாதென சேரன் அறிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments