Latest News

August 13, 2015

புலம்பெயர் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைப்பது சிக்கலாகும் -ஐ.ம.சு.மு
by admin - 0

புலம்­பெயர் இலங்­கை­யர்­களை நாட்­டுக்குள் மீண்டும் வர­வ­ழைப்­பதும், அவர்­க­ளுக்­கான வாக்­கு­ரி­மையை வழங்­கு­வதும் சிக்­க­லான விட­ய­மாகும். இலங்­கைக்கு வெளியில் வாழும் இலங்­கை­யர்­களை மீண் டும் நாட்­டுக்குள் வர­வ­ழைக்கும் போது நாட்டின் பாது­காப்­பையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் தெரி­வித்­தனர்.

எமது எதிர்­கால அர­சாங்­கத்­திலும் புலம்­பெயர் இலங்­கையர் தொடர்பில் ஆராய்ந்தே நட­வ­டிக்கை எடுப்போம் எனவும் ஐ.ம.சு.மு.வின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை காரி­யா­லயத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்­டி­ருந்த கட்­சியின் ஊடகப்பேச்­சாளர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நல்­லாட்­சியை உரு­வாக்­கு­வ­தாகக் கூறியே ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியை அமைத்­தது. ஆனால் இந்த அர­சாங்கம் முழு­மை­யாக ஏமாற்று நட­வ­டிக்­கை­களை மட்­டுமே செய்­துள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வைத்து ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கான ஆத­ரவை பெற்றுக்கொண்­டுள்­ள­னரே தவிர, நேர­டி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு மக்கள் ஆத­ரவு வழங்­க­வில்லை. அதேபோல் இப்­போதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவை வைத்­துக்­கொண்டே ரணில் மக்­க­ளிடம் வாக்கு கேட்­கின்றார். ஆகவே மக்­களை ஏமாற்றும் செயற்­பாட்­டினை ரணில் விக்­கி­ர­ம­சிங்க முதலில் கைவி­ட­வேண்டும்.

மேலும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைமை இன்று பிச்­சைக்­காரி கர்ப்­ப­மா­ன­தைப்போல் ஆகி­விட்­டது. தனக்கு ஒரு­வேளை உணவு இல்­லாத நிலையின் வயிற்றில் வளரும் பிள்­ளைக்கும் உணவு கொடுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டு­வ­தைப்­போல ஐக்­கிய தேசியக் கட்­சியும் இன்று தாம் சுய­மாக ஆட்சியமைக்க முடி­யாது போயுள்ள நிலையில் யானையில் வேறு சில­ரையும் ஏற்­றிக்­கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இன்று மஹிந்­தவே பிர­தான சிக்­க­லாக உள்ளார். அவரை இலக்கு வைத்தே அனைத்து விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் இந்த நாட்டில் ஜன­நா­யக ரீதியில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­ய இந்த நாட்டை அமை­தி­யான நாடா­கவும் ஊடக சுதந்­தி­ரத்தைப் பலப்­ப­டுத்­திய தலை­வரும் மஹிந்­த­வே­யாவார். அன்று எமது ஆட்­ச்சியில் இருந்த ஊடகச் சுதந்­திரம் இன்று உள்­ளதா என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் தமது மன­ச்சாட்­சி­யிடம் கேட்­டுப் பார்க்கவேண் டும்.

மேலும் புலம்­பெயர் இலங்­கை­யர்­களை நாட்­டுக்குள் மீண்டும் வர­வ­ழைப்­பதும், அவர்­க­ளுக்­கான வாக்­கு­ரி­மையை வழங்­கு­வதும் சிக்­க­லான விட­ய­மாகும். இலங்­கையின் பிர­ஜைகள் பலர் இன்று தொழில் நிமித்தம் வேறு நாடு­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் புலம்­பெ­யர்ந்த பலரும் உள்­ளனர். ஆகவே இலங்­கைக்கு வெளியில் வாழும் இலங்­கை­யர்­களை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைக்கும் போது அவர்கள் தொடர்பில் சரி­யான தக­வல்­களை பெறவேண்டும். நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் எமது அரசாங்கத்தில் நாம் அவர்களை மீண்டும் இணைந்துக்கொள்ளும் நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப் போம் எனக் குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments