தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அமுல்படுத்துவதற்கு நிதி இருக்கின்றது என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னிடம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்ல ஒரு டொலரேனும் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் கத்தியால், கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹொரனையில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாம் அளித்துள்ள வாக்குறுதிகள் சகலவற்றையும் நிறைவேற்றுவதற்கு எம்மிடம் நிதி இருக்கின்றது. நிதியை திரட்டு விதம் எங்களுக்கு தெரியும். வெட்கம் கெட்ட மனிதர்கள் என்னுடய வங்கிக்கணக்கில் 18 மில்லியன் டொலர் இருப்பதாக கூறுகின்றனர். எனது கணக்கில் ஒரு டொலரேனும் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் என் கழுத்தை நானே அறுத்துக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment