தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து முடிவடைந்த 100 நாட்களுக்குள் இடம்பெற்றுள்ள மனிதப் படுகொலைகள் 92 ஐயும் தாண்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் தமது தேர்தல் பிரச்சாரத்துக்கு பாதாள உலக கும்பளைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
No comments
Post a Comment