Latest News

August 16, 2015

ஏன் குழம்பியது இணக்கம்! அம்பலமாகியது உண்மை! தராகி மைந்தன்
by admin - 0

இன அழிப்பின் உச்சமான முள்ளிவாய்க்கால்  பேரவலத்தின்  பின்னர்  நடக்கும் இரண்டாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் களத்தில் தமிழ் அரசியல் கட்சிகள்  பல்வேறு அணிகளாக தாங்களும் பிரிந்தும் மக்களையும் கூறு போட்டு மாறிமாறி சேறுபூசும்  நிலைவந்துள்ளது. இந்நிலையானது தேசியத்தை நேசிக்கும்  அனைவருக்கும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளதோடு தமிழ்த் தேசியத்திற்கு எதிரானசக்திகளுக்கும் அதிக தகவல்களையும் வழங்கியுள்ளது.

அரசியல் கட்சிகள் தொடர்பான நீண்டகாலமான ஆய்வினை மேற்கொண்டுவருபவன் என்றஅடிப்படையிலும்  தமிழ்த்தேசியத்தலைவரால் தூரநோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதையவிடாமல்  மென்மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்ற பெருவிருப்புக்கொண்டு அம்முயற்சியில் கடந்தபல ஆண்டுகளாக பல்வேறுமுயற்சிகளில்  ஈடுபட்டவன் என்ற அடிப்படையிலும் அதற்காக பெருமளவு நேரத்தையும்  ஒருதொகைப்பணத்தையும்  செலவழித்தவன் என்ற அடிப்படையிலும்  சிலஉண்மைகளைக்  கூறி வைக்கவிரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன்  நோக்கத்தினை செயற்படுத்தும்  கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்தும் இன்று இருக்கும்   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  இருக்கப்போவதில்லை. தேவையென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றபேரின்கீழ்  தமிழரசுக்கட்சிமட்டும் இருக்கும் ஏனைய மூன்றுகட்சிகளும் நிலைத்துநிற்கக்கூடிய அளவிற்கு கௌரமாகவும்  சமதரப்பாகவும் பேணப்படவில்லை. திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன் அவர்களின் கடந்தகால அறிக்கையிலிருந்து தெளிவாகஅறியக்கூடியதாகஉள்ளது.

2010 ஆம் ஆண்டு திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலானஅகில இலங்கைத் தமிழக்காங்கிரஸ்  வெளியேறிய நிலையில் எஞ்சிய மூன்றுகட்சிகளும் மௌனம் கலைத்து வெளிப்பட்டை உள்ளகமுரண்பாடுகள் தொடர்பாக கதைக்க முற்பட்டவேளையில் கூட தமிழரசுக்கட்சியின் தலைமையினர்  எந்தவகையிலும் அசைந்து கொடுக்காத நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இவை தொடர்பாகப் பேசப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே ஊடகவியாளர் வித்தியதரன்  போராளிகளை ஒருங்கிணைத்து கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான தகவல்கள் மெல்லக் கசியஆரம்பித்தன.

நிலைமைகள் எல்லைமீறிப்போனதை உணர்ந்து எனக்குத் தெரிந்த  நம்பிக்கையான சிலதரப்புகளால் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின்  தலைவர்கள்  ஜரோப்பியநாடு ஒன்றிற்கு நேரடிச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஒருகட்சி தவிர்ந்த தமிழரசுக்கட்சி உட்பட இன்று கட்சிகள் கலந்துகொண்டன. கலந்துகொள்ளாத குறிப்பிட்டகட்சி 2009 இன் பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்கள். 2009 இன் மே 19  விடுதலைப்புலிகள் மௌனிக்கப்படும்  வரை விடுதலைப்புலிகளுக்கெதிரான செயற்பாடுகளில் இராணுவத்தினருடன் இணைந்துசெயற்பட்டார்கள். நீறுபூத்தநெருப்பாக இருக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்பினரைச் சந்திக்க  கூச்சப்பட்டிருக்கலாம்.

குறிப்பிட்ட சந்திப்பில் பலவிடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்யும்வரை இடைக்கால நிர்வாகநடைமுறை ஒன்றை ஏற்படுத்த அனைத்துக் கட்சிகளையும்    சமதரப்பாக பேணுயது.  முக்கிய முடிவுகள் அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் கண்டிப்பாக கதைத்துச்செயற்படுத்துவது திரு.சுமந்திரன் அவர்களின் தனிப்பட்ட சந்திப்புக்களைத் தவிர்ப்பது (இன்னொருவருடன் இணைந்தேசந்திக்கவேண்டும்) அரசியல் பேச்சுக்கள், பேச்சுவார்த்தைக் குழுபோன்றவிடயங்களுடன் வரப்போகும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் வாக்குகள் பிரிபடாதவகை தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரை  தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது, வித்தியாதரன் தலைமையிலான உருவாகிவிடமாலே சமாளிப்பது போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டு அவைக்கான தீர்வுகளும்  கலந்துரையாடப்பட்டன.

ஆனால் துரதிஸ்டவசமாக இவ்விடயங்களைச் செயற்படுத்தஅனைவரும் கலந்துரையாடலில் ஒப்புக்கொண்டபோதும் எந்தவொருவிடயத்தையும்இற்றைவரை நடைமுறைக்குக் கொண்டு வரமுன்வரவில்லை.குறிப்பாக மூன்றுகட்சிகளும் சேர்ந்துதயாரித்தயாப்பின் அடிப்படையில் புரிந்துணர்வுஒப்பந்தம்ஒன்றினைச்செய்யவிரும்புவதாக போக்குக்காட்டி ஏமாற்றப்பட்டது.

சிங்ப்பூரில் சுமந்திரனால்  நடத்தப்பட்ட சந்திப்பு  தொடர்பாக தமிழரசுக்கட்சியின்  தலைவருக்கோ              அங்கத்துவ கட்சிகளின் தலைவருக்கோ தெரியாத நிலையில் 2 ஆவது சந்திப்பினை திரு.சுமந்திரன்                 புலம்பெயர் தேசத்தில் தமிழ்மக்களை எந்தவகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத உலகத்தமிழர்       பேரவையுடன்  இணைந்து சந்திப்பினை மேற்கொண்டார்.அன்றைய சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயங்கள்                  தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்  நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழ்மக்கள்  முகம் அழிக்கும் அளவிற்கு மாறிமாறி வசை மாரி பொழியும் நிலைவந்திருக்காது.

வித்தியாதரன் தலைமையிலான முன்னாள் போராளிகள் என்ன நோக்கத்தில் யாருடைய பயங்கரமான பின்னணியுடன் சென்றிருக்காலம் ‘வாருங்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுவோம்” என்ற வசனத்தை யாராவது ஒருவர் அல்லது பழுத்த அரசியல்வாதி சம்பந்தன் ஐயா தனது சாணக்கியத்தைப் பாவித்திருந்தால் இன்று  ஜனநாயகப் போராளிகள் கட்சி என்றஒன்றுஉருவாகியே இருக்காது.

தூரநோக்கும் சிந்தனையுடன் தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது. என்றுவாக்குப்போடுங்கள் எனக் கேட்கும் கூட்டமைப்பின் கட்சியைப் பலமாக வளர்த்தெடுக்கும் விருப்பமும் இல்லை. ஏனையவர்களை கையாளும் சாணக்கியமும் இல்லை என்பதே உண்மைஉண்மையில் முடிவுகளுக்குக் காரணம் சம்பந்தன்,சுமந்திரன் தனியான சுதேச்சாதிகாரமான முடிவுகளும் மாவைசேனாதிராஜாவின் அழுமையற்ற பொம்மைத்தனமான தலைமைத்துவமுமே.

சுமந்திரன்,சம்பந்தன் இருக்கும் மட்டும் முடிவுஎடுத்துச் செயற்படுத்தும்வரைதமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ்மக்களுக்கு எந்தவிமோசனமும் இல்லை. ஏனென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வேறுசக்திகளின் நலன்களுக்கு விலைபோய்விட்டார்கள். இந்தியாவின் சிவசங்கர்மேனனும், ஆ.மு மேணனும் 2009 மேயில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருடன் என்ன பேசினார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்துவிட்டு உண்மையினைப் புரிந்துகொள்ளுங்கள்.  எதுஎப்படியாயிலம்  தமிழ்த்தேசிய அரசியலில் ஒருமாற்றம் வரவேண்டுமாயின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் சர்வாதிகாரப்போக்கும் விடுதலைக்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை அர்ப்பணிப்புக்களையும் விலைபேசி விற்பதனைத் தவிர்ப்பதற்கும் கண்டிப்பாக சைக்கிள்  சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியமக்கள் முன்னணிவெற்றிபெற்றாகவேண்டும்.

குறிப்பு :-(தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக  எனது குற்றச்சாட்டுக்களுக்கு எழுத்து மற்றும்  சொல்வடிவிலான ஆதரங்கள்  உண்டு)

நன்றி-பதிவு
« PREV
NEXT »

No comments