Latest News

August 26, 2015

அரசு அமைப்பதில் சிக்கல் -மகிந்த மைத்திரி இணைவார்களா?
by admin - 0

இப்போதும் இலங்கை அரசியலில் ஸ்திரதன்மை இல்லை அதாவது தேசிய அரசு அமைப்பதில் ரணிலுக்கும் மைத்தரிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .

சுகந்திரகட்சியை சேர்ந்த மைத்திரிக்கு தனது கட்சிக்கு முக்கிய அமைச்சுப்பதவியை தருமாறு அடம்பிடிக்கிறார் ஆனால் அதற்கு ரணில் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இதனால் அரசு அமைப்பதில் பெரும் சிக்கல் நிலை ஶ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் அதிகம் ஆசனம் வென்றது மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பே ரணில் தலமையிலான கூட்டமைப்பில் மைத்திரி ஆதரவு உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர் அவர்கள் சுகந்திர கட்சி ஆதரவாளர்களாகும். இவர்களால்தான் ரணில் தரப்பு மகிந்தவை தோற்கடித்தது.


ரணில் மற்றும் மைத்திரி தரப்புக்கும் இடையிலான பதவி போர் இந்த அரசாங்கம் நிரந்தரமற்றது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் மகிந்த மைத்திரி இரகசிய சந்திப்பின் பின் மகிந்த அடக்கி வாசிக்கிறார். மகிந்த குடும்பத்தை பாதுகாப்பதாக மைத்திரி வாக்களித்துள்ளார் அதற்காக மகிந்த எதுவும் பேசாமல் தனக்கு அரசமைக்க ஆதரவு தரவேண்டும் என கோரியுள்ளார்.
 ரணிலுடன்  முரண்பட்டால் அரசு அமைக்க ஆதரவு தர மகிந்த சம்மதித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் இன்றும் அரசில் குழப்பமான சூழலே ஏற்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments