Latest News

August 19, 2015

நாடாளுமன்ற தேர்தலும் புலத்தில் ஒரு பார்வையும்
by admin - 0

ஸ்ரீலங்காவில் நடந்த தேர்தலில் ஒரு பரர்வை.

சுதந்திரம், விடுதலை என்பது ஒரு கனி, வெற்றி தோல்வி என்பது இயற்கை, அதனால் வென்றவர்கள் மக்களின் மனதை, அவர்களின் நம்பிக்கையை வீண் செய்யாது நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் எமது தாயகத்தில் எமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன ஆழிப்பை, நில அபகரிப்பை, கலாச்சார சீர் கேட்டைத் தடுத்து நிறுத்தி சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஸ்ரீலங்கா அரசை எடுத்துச் செல்வதன் மூலம் எமக்கொரு நிரந்தர அரசியல் தீர்வு  கிடைக்கும் என நம்புகின்றோம்,

ஐக்கிய இலங்கைக்குள்தான் தீர்வு என தந்தை செல்வா காலத்திற்கு சென்று நீங்கள்  அவரைப் போல் ஏமாந்து நீங்களும் அயுதப் போரட்டம்தான் ஒரே வழி எனத் தீர்மானிக்கும் காலம் வர இது  ஒன்றும் 1983 அல்ல!

  நீங்கள் அரசியலில் இலாபம் சேர்க்க  வந்திருந்தால்?

அவ்வேளையில் அங்கே அழிக்கப்படுவது எமது இனம்தான், தற்போதைய நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என நாம் நம்புவது ஆனது  ஐநாவில் வரப்போகும் தீர்மானத்தை நாமே சிதைப்பதாகும், இச் சர்ந்தர்ப்பத்தை நாம் தவறான வழியில் வழி நடத்தி சென்றால் முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு ஒருபோதும் எமக்கு நீதி கிடைக்கப் போவதில்லை நாம் அடிமைகலாக வாழ்ந்து அழிவதே உறுதி.

கடந்த காலங்களில் சிங்களம் எமக்கு எந்த தீர்வும் தராமல் இழுத்தடிப்பு செய்ததை திரு சம்பந்தன் ஐயா நன்கு அறிவார், இன்று தாயகத்தில் ஒரு மூத்த அரசியல் வாதியாக திகழும் அவர் தானும் சுமந்திரனும்  ஒரு முடிவை எடுத்து ஐக்கிய நாடு எடுக்கும் சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற தீர்மானத்தை உள்நாட்டு பொறிமுறைக்குள் கொண்டுவந்தால் எமது இனத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும் ஒரு வரலாற்றுத் துரோகம் ஆகும் .

ஆயுத போரட்டத்தில் நாம் பலமாக இருந்த பொழுது கருணா எடுத்த முடிவு எமது ஆயுத போராட்டத்த்தைப் பலவீனப்படுத்தி முள்ளிவாய்க்கால் அவலத்தை எமது இனத்திற்கு ஏற்படுத்தியது, அதன் அடிப்படையில் புலத்த்கில் வாழும் நாம் அயராது உழைத்து சர்வதேசத்தின் கவனத்தில் கொண்டுசேர்த்து சர்வதேசத்தால் எமக்கொரு விடிவு வரும் வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணிபோல் எமது மக்களை ஏமாற்றாமல் நடப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது தலைவரால் உருவாக்கப் பட்ட அமைப்பு என்ற நம்பிக்கையில் எந்த அரசியல் அனுபவமும் தொலை நோக்கு சிந்தனையும்  அற்று  எமது மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள், எமது வேதனை என்னவெனில் சுமந்திரன் போன்றவர்களுடைய கருத்து, ஸ்ரீலங்காவையும் எமக்கு எதிராக இன அழிப்பு செய்தவர்களையும் பாதுகாக்கும் அடிப்படையில் அடங்குகின்றது, மாவை சேனாதிராஜா போன்றவர்களுடைய சுயநலப் போக்கும் தனது இலாபம் ஈட்டும் செயலும் வேதனை அளிக்கின்றன.

அரசியல் என்பது பொதுச்சேவையாகும் அரசியலில்  இலாபம் தேடி வந்தால் அவர் மக்கள் சேவகன் அல்ல,  எதிர்காலத்தில் எமது இனத்தின்  சிந்தனை அற்று அரசியல்  இருந்தால் நாம் அழிந்து போவது உறுதி, இன்று சிங்களம், எமக்கொரு நிரந்தர தீர்வை தராமல் இழுத்தடிப்பு  செய்து வருவதை தமிழ் மக்கள் ஆகிய நாம் நன்கு அறிவோம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மதவாச்சி, உடப்பு போன்ற பிரதேசத்தில் சிங்கள ஆதிக்கம் தலை நிமிர்ந்து ஆடுகின்றது, அது இன்று மணலாறு தொடக்கம் வெலியோயா எனப் பெயர் மாற்றப் பட்டு  முல்லைத்தீவு வரை நீண்டு செல்கின்றது, மட்டுமல்லது 19ம் திருததச்சட்டத்தில் தமிழ் மொழி புறந்தள்ளப்பட்டு உள்ளதுடன்,  இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புடன் கூடிய ஒடுக்குமுறை எமக்கெதிராக சிங்களப் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

புலத்தில் வாழும் தமிழர்கழாகிய நாம்  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல மேலே குறிப்பிட்டுள்ளேன் ஒருசிலரின் சுயநல செயல்ப்பாடுகள் அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் TNA யில் இருக்கும் நம்பிக்கையை எமக்கு இல்லாமல் செய்கின்றன, சுமந்திரன் போன்றவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் அல்ல? அவருக்கு, உள்நாட்டு பொறிமுறைக்குள் யுத்தகுற்ற விசாரணை அமையவேண்டும் என அவர் சர்வதேச ஊடகத்திற்கு அறிக்கை விட அவருக்கு உரிமையும் இல்லை! திரு சுமந்திரனின் கருத்துப்படி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச சுயாதீன விசாரனையை வலியுறுத்த TNA க்கு அதிகாரம் இல்லை?.. என்றால் அவருக்கு உள்நாட்டு விசாரணையை பகிரங்கமாக  ஊடக்த்திற்குக் கூற  அணுமதியும் இல்லை!.. ஒன்றை மட்டும் அவரால் கூறி இருக்க முடியும் ( உள்நாட்டு விசாரணையோ சர்வதேச விசாரணையோ அவற்றை பாதிக்கப்பட்ட மக்களும் ஐக்கிய நாடுகள் சபையும் தீர்மானிக்க வேண்டும் TNA அல்ல!)

சுமந்திரன் உள்நாட்டு, விசாரணையை வலியுறுத்துவதுவதை தவிர்த்து TNA யின் பிரதானிதியாக  தாம் தமது கடமையை செய்திருக்க வேண்டும்: எமது மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அவர்களை அகதிகளாக்கி அவர்களின் பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறத் தவறினால் அவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் தற்போது நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் அவற்றை திரு சுமந்திரன் தெரியப்படுத்தி இருக்க வேண்டும், மாறாக அவரின் கருத்து அவரை நம்பிய மக்களை ஏமாற்றி அரசியல் செய்து தனது இலாபம் ஈட்டும் வகையில் எம் இனததை அழித்தவர்களை  பாதுகக்கும் அடிப்படையில்  அமைவது வருத்தம் அளிக்கின்றது, திரு சுமந்திரன் ஒரு சட்டத்தரணி அவருக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை அவரால் முடிந்தால் எனது கருத்துக்கு எதிராக challenge பண்ணலாம்.

இனியும் எமக்கு நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பை  TNA,யும்  ஸ்ரீலங்காவின்,  பாணியில் இழுத்தடிப்பு செய்தால் இன்றைய உங்கள் வெற்றி அனாவசியமானதும் அருவருப்புக்குரியதும் ஆகும், யுத்தக்குற்ற விசாரனை  பற்றி நீங்கள் பேசுவதெண்றால் உங்கள்  தனிப்பட்ட கருத்தைக் கூறும் உரிமை உங்களுக்கு இல்லை நீங்கள் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் உங்களை அர்ப்பனித்து உள்ளீர்கள்  பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தைக் கேட்டறிந்து சர்வதேச ஊடகத்திற்குத் தெருவிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு, அதுதான் சிறந்ததும்.

இனிவரும் காலங்களில் தமிழன் என்று நிமிர்ந்து நின்று அரசியல் ஒரு சமூகப் பணி என்பதை ஒவ்வரு தமிழ் அரசியல்வாதியும்  கருத்தில் கொண்டு, நீங்கள்  செயல்ப்படும் காலம் இது, அப்படி நீங்கள் செயற்பட்டால்  விடிவு எமக்கு,,! அல்ல சிங்களம் தரும் அர்ப்ப ஆசைகளுக்கு அடிபணிந்து போனால் இன்றைய வெற்றி ஈட்டித் தந்த மக்களின் கண்ணீருக்கு நீங்களே பதில் கூற வேண்டும்.

எமது மக்களின் ஆதரவுடன் இத் இத்தேர்தலில் வென்ற நீங்கள் கடந்த கால தவறுகளில் இருந்து மீண்டு, எதிர்  வரும் காலத்தில் திடமான காத்திரமான முடிவை எடுத்து விடுதலையை எமக்குப் பெற்றுத்தர புலம்பெயர்ந்த தமிழர்  நாம் பணிவான வேண்டுகோள் விடுக்கின்றதுடன், உங்கள் செயல்ப்பாடுகள் சிறந்த முறையில் அமைய  வாழ்த்துகின்றோம்.

தயீசன்
thayeesan@yahoo.co.uk
« PREV
NEXT »

No comments