Latest News

August 19, 2015

விஜயின் புலி டிரைலர் வெளியாகியது!
by Unknown - 0

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பைப் பெற்றதுடன் பல புதிய வரலாறுகளையும் படைத்தது. அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது புலி படத்தின் டிரை இன்று நள்ளிரவு வெளியாகியிருக்கிறது.
« PREV
NEXT »

No comments